எதிர் நீச்சல் தொடர் மாரிமுத்துவின் இறப்பு சின்னத்திரை மற்றும் சினிமா துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மாரிமுத்துவுடன் நேற்று ஹரிபிரியா எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மாரிமுத்து. இவர் இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி இருக்கிறார். சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார்.
மேலும், இவர் இந்த சீரியலில் வில்லனாக நடித்து இருக்கிறார். இந்த சீரியலில் இவருடைய பஞ்சுகள், வசனங்கள் எல்லாமே பார்வையாளர் மத்தியில் ஈர்ப்பை பெற்று இருக்கிறது.இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. இவர் தேனி மாவட்டம் பசுமலை பகுதியை சேர்ந்தவர். இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.
அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.அதன் பின் இவர் “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராக பல படங்களின் நடித்து இருக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் மாரிமுத்து மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். மாரிமுத்து இன்று காலை ஒரு சீரியலின் டப்பிங்கிற்காக சென்று இருக்கிறார். டப்பிங் பேசிக்கொண்டு இருக்கும் போதே அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனே தன்னுடைய காரை எடுத்துக்கொண்டு தானே ஓட்டி சென்று மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்துள்ளது.
அவருக்கு வயது 56. மாரிமுத்துவின் உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்து. பல்வேறு சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் எதிர்நீச்சல் தொடரில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் மாரிமுத்துவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இப்படி ஒரு நிலையில் நேற்று மாரிமுத்துவிடம் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஹரிப்ரியா
அதில் ‘நேற்றுதான் நாம் இந்த புகைப்படத்தை எடுத்தோம். இதை நீங்கள் கூட உங்களின் பக்கத்தில் பகிர சொன்னீர்கள். ஆனால், இப்போது நீங்கள் இல்லை. இப்போதும் அதை நம்ப முடியவில்லை. என்ன சார் அவசரம், ஏன் எங்களை எல்லாம் இப்படி விட்டு சென்றீர்கள். நந்தினி உங்களை எப்போதும் மிஸ் செய்வார் மாமா. உண்மையான கலைஞருக்கு முடிவு என்பது கிடையாது. நீங்கள் எப்போதும் எங்கள் மனதில் இருப்பீர்கள் உங்கள் ஆத்மா அமைதியில் சாந்தி அடையட்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.