கோலங்கள் சீரியல் To சினிமா – இலவசமாக சிலம்பம் கிளாஸ், காதல் பட நடிகரின் தற்போதைய நிலை.

0
1753
kadhal
- Advertisement -

காதல் பட வாய்ப்புக்காக நாங்கள் அந்த ஆபிஸ்க்கு சென்று இருந்தோம் அந்த ஆபீஸில் ஒரு டேபிள்,டெலிபோன் ஒரு பேனா ஒரு டைரி அவ்வளவுதான் இருக்கும் யாராவது சான்ஸ் கேட்டு வந்தார்கள் என போன் நம்பர் வாங்கி கொண்டு அவர்கள் புகைப்படத்தையும் வாங்கிக்கொண்டு அனுப்பி விடுவார்கள். நாங்கள் சென்றிருந்த பொழுது யாரும் இல்லை நாங்களாகவே டைரியில் நம்பர் எழுதிவிட்டு புகைப்படத்தை வைத்து விட்டு வந்துவிட்டோம். ஒரு பத்து நாட்கள் கழித்து கால் செய்து இந்த மாதிரி வாங்கனு கூப்பிட்டா பொழுது நான் சென்று இருந்தேன் அப்போது கேன்டி கேமரா வைத்து நடிக்க சொல்லிசொன்னார்கள் நான் எடுத்துக் காட்டினேன். ஒரு 4 மாதங்கள் கழித்து போகும்போது டரைக்டர் நீ அத போய் பாருங்க என்று சொன்னாங்க நானும் போய் பார்த்துட்டு விமல் உங்க பசங்க நடிக்கிற பசங்க இருந்த கூப்பிட்டு வாங்க அவங்களுக்கு சான்ஸ் கொடுப்போம் என்று சொன்னார்கள் நானும் பத்து பசங்கள கூப்பிட்டு போனேன்.

-விளம்பரம்-

தட்டு கழுவி கொண்டிருந்த நபருக்கு வாய்ப்பு :-

பாபு என்ற நபர் வர சொல்லி தட்டு கழுவிக் கொண்டிருந்த பயனை டைரக்டர் கூப்பிட்டு. இவரை நடிக்க வைக்கலாம் கூப்பிடுங்கள் என்றார் அதற்கு பாபு சார் அவன் வேலையை பார்க்க வந்தான் நடிப்பதற்காக வரவில்லை என்று கூறினார். இல்லை டரைக்டர்க்கு அவரை மிகவும் பிடித்துப்போக என்னையும் கூப்பிட்டு அவரை கூப்பிட்டு புகைப்படங்கள் எடுத்து வைத்தார்கள் அத்தோடு மட்டுமில்லாமல் அவரை கமல் மாதிரி நடிக்க சொல்லி நீங்கள் என்ன பண்ணுவீர்கள் என்று எனக்கு கேட்டார்கள் நான் என்ன மாறி பன்னனும் சொல்லுங்க பண்ணிக்கலாம்னு சொன்னேன். எவ்வளவு படம் பண்ணியிருக்கீங்க கேட்டாங்க. நான் ஒரு இருபது படம் பண்ணி இருக்கேன் சார் அப்படினா ஓகே அந்த கேரக்டர் என்ன நடித்து காட்டு என சொன்னாங்க நடித்து காட்டியவுடன் நீங்கதா அந்த கேரெக்டர் பண்ணனும் பெயிமன்ட் எவ்வள நாளும் வாங்கிகோங்க என கூறினார்கள். அதற்கடுத்த ஒரு மூன்று மாதங்கள் கழித்து கூப்பிட்டு அந்த சீனுக்கு டைரக்டர் வரணும் வந்தவுடன் சொல்றேன். நான் செய்றேன்னு சொன்னேன் அவரும் வந்தார். வந்தவர் அந்த சீன் எப்படினா ரவிக்குமார் சினிமா துறைக்கு வருவதற்கு முன்னாடி அந்த ரூம்ல இருந்து எப்படி வந்தாங்க எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டாங்க அந்த ஒரு சீன் எல்லாத்துக்கும் தெரிய வைக்கிறதுக்காக தான் இந்த ஒரு சீனி ஏற்படுத்திக் கொடுத்து எங்களை நடிக்கச் சொன்னார்கள். ஷூட்டிங் எடுத்ததை அவங்க அப்போ தங்கியிருந்த அதே மேன்சன் அதே ரூம் தான்.

- Advertisement -

வில்லன் ஆசை சிறுவயதில் இருந்தே :-

சினிமாவில் வில்லன் ஆசை வந்தது சிறு வயதில் இருக்கும் போதே. சிறுவனாக இருக்கும் போதே ஜாக்கிஜான் படங்கள் அதிகம் பார்ப்பேன். ஸ்போர்ட்ஸ்,சிலம்பம் பாக்ஷிங் எல்லாத்திலையும் இருக்கனும் அப்படின்னு ஒரு ஆசை இருந்தது 8 ஸ்டாண்டர்ட் படிக்கும்போதே பாக்ஸிங்ல் இருந்தேன். அப்படி இருந்த கனவுகளில் வந்து சினிமா கனவை நிறைவேற்றி விட்டேன் அதற்கு அப்புறம் வந்துட்டு பாக்ஸிங் சிலம்பம் எல்லாமே கிளாஸ் நடத்த அரம்பித்தேன். சினிமா வந்து சக்சஸ் ஆகி பெயிலியர் ஆன ஒன்று. அதன்பின்பு காதல் படம் வெளிவந்தப்ப நான் வந்து படம் பார்க்கல. எனக்கு அன்னைக்கு வந்து கோலங்கள் சீரியல்லே வந்துட்டு ஒரு கொலை செய்ற இருந்தது. நான் வந்த அடுத்த நாள் போயிட்டு படம் பார்த்தேன் நம்ம நடித்த காமெடி சீன் எப்படி வந்திருக்கு பார்க்கலாம்னு போன போதும் நான் தியேட்டரில் இருந்து மக்கள் எல்லாம் பார்த்து ஆரவாரம் பண்ணாங்க. என்ன பாத்து ஃபோட்டோ எடுத்தீங்க சூப்பரா பண்ணி இருக்கீங்க எப்படி இருக்கீங்க எல்லாரும் சொன்னாங்க நான் வந்து தியேட்டர்ல போய் படம் பார்த்ததில்லை நான் பார்த்த பர்ஸ்ட் படம் அதான் கடைசி படமும் அதான். இதுவரைக்கும் படம் பார்க்கல தியேட்டர் போகி என்று கூறுகிறார்.

நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் :-

அதன் பின்பு சினிமா வாய்ப்புகள் வந்தது கூப்பிடுவாங்க பண்ணுங்க ஒரு கேரக்டருக்கு இருக்கு நீங்கதாபண்ணனும் கூப்பிட்டாங்க ஒரு கும்பல் ஒரு ஆளா நிப்பாட்டுவாங்க. இப்படியாக ஒவ்வொரு தடவையும் போய்கிட்டு இருந்துச்சு சரி நல்ல சான்ஸ் வரட்டும் வாய்ப்புக்காக காத்திருந்தேன் ஒவ்வொரு தடவையும் கூப்பிடும்போது அப்படித்தான் கூப்பிடுவாங்க நல்ல கெரெக்டர் இருக்கு பண்ணுங்கன்னு அங்க போய் பார்த்தோம் நான் ஒரு கும்பல்ல பத்தோட பதினொன்னு இருக்கும் ஏமாற்றங்கள் மட்டுமே தொடர்ந்து செய்துக்கொண்டிருந்தேன். அதுக்கு அப்புறம் ஓகே நல்ல சான்ஸ் வரும் என வாய்ப்புக்காக காத்திருந்தேன். அப்புறம் என்ன வந்துட்டு சுல்தான் படம் வாய்ப்பு கிடைச்சது டைரக்டர் சொன்னார் ஒரு காமெடி வில்லன் மாதிரி பண்ணுங்க கண்டிப்பா வொர்கொட் ஆகும் நீங்க பண்ணுங்க சொன்னார். நானும் அங்க போய் பார்த்தேன் 100 பேர் வந்திருந்தாங்க எனக்கு பயங்கர ஷாக் அப்புறம் டைரக்டர்கிட்ட போயி கேட்டேன் அவர் சொன்னாரு பண்ணுங்க அவங்க உங்களது நல்லா இருக்கும் உங்களுக்கு ஒரு நல்ல சீன் வைப்பும் இங்க முடியாது கிராமத்திற்கு போய் வைக்கலாம் என்று சொன்னாங்க. அப்புறம் கார்த்தி சார் ஊர்ல இருந்து வந்தவுடனே அவர தோளில் தூக்கி வச்சு ஒரு டயலாக் பேசணும் அந்த சீன் கொடுத்தாங்க பண்ணி முடிச்சுட்டு அது நல்லா இருந்தது. பெரிய பெரிய ஆக்டர் கூட நடிச்சிருக்கேன் அவர் விஜய் படம் திருப்பாச்சி சிவகாசி அவர் கூட நடிச்சிருக்க. அஜித் சார் கூட அட்டகாசம் பண்ணியிருக்க என கூறினார்.

-விளம்பரம்-

என்னை பார்த்து நடிக்க கத்துக்கொண்டேன் என கூறிய பெரிய ஆக்டேர் :-

தற்சமயம் பொன்னேரியில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது. ஏவிமோகன் சார் என்னை பார்த்து சார் வாங்க நீங்க காதல் படத்துல நடிச்சிக்கனு கேட்டாங்க. ஆமா சார் சொல்லுங்க சார் உடனே அவர் கேரவனுக்கு என்ன கூப்புட்டு போனார். சார் நான் உங்கள பார்த்து தான் நான் நடிக்க கத்துகிட்டேன். நீங்க இருக்க வேண்டிய இடத்தில் நான் தான் இருக்கேன் உங்கள பார்த்து வந்தவன் நான் அப்பிடினு சொன்னார். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல ஒரு பெரியவர் வந்து நீங்க இருக்க வேண்டிய இடத்துல தான் நான் இருக்கேன் உங்களை பார்த்து சொல்லும்போது ஒரு சந்தோஷம். சரி என்னதான் இருந்தாலும் சினிமா வாய்ப்பு வரவில்லை என்றாலும் இந்த மாதிரி ஒரு ஆக்டேர் கூப்பிட்டு சொல்லும்போது அது ஒரு சந்தோசமா இருந்தது. அப்படி அந்த படம் சூட்டிங் நடந்து இருக்கும் போதே கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வெச்சு ஒரு சக மனிதனை போல் நினைக்காமல் ஒரு நட்பாக பலகுவார் வாங்க சார் போங்க சார் என்ன சார் பண்றீங்க என்ன பேசுவது அது ஒரு சந்தோஷம் என கூறினார்.

இலவசமாக கல்வி கொடுப்பதே தற்போது என்னுடைய ஆசை :-

அதன் பிறகு எல்லா விதத்திலும் திறமையோடு இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதன்பிறகு ஜிம் ஃப்ரீயாக வைத்தேன் பாக்ஸிங் கிளாஸ் சலம்பம் கிளாஸ் என அனைத்தும் ஃப்ரீயாக வைத்தேன் இப்போது வந்துட்டு என்னுடைய குறிக்கோள் டீயூசன் சென்டர் ஃபிரியாக ஆக வைக்கணும். நமக்கு கல்வி முக்கியம் சுதந்திரத்திற்கு திறவுகோல் கல்வி தான். எனக்கு கல்வி வந்து பார்த்தீங்கினா கம்மியாக இருந்தாலும் அந்த கல்வியால தான் நான் வந்து இங்க நிக்கிறேன் இப்போது உங்களுக்கும் எவ்வளவு கல்வி இருக்கிறதால இந்த மாதிரி பேசுறீங்க, இந்த நிலைல நீங்க எல்லாரும் இருங்கிறிங்க. அந்த காலத்தில் அரிசி பத்து ரூபாய்க்கு வாங்கிட்டு இருந்தோம். இப்பொழுது அரிசி வாங்க வேண்டும் என்றால் ரூ. 50 ல் இருந்த ரூபாய் 60 ரூபாய் வரை ஆகின்றது. பெற்றோர்கள் பிள்ளைகளின் படிப்புக்காக பார்க்கிறதா கல்விக்காக பார்க்கின்றதா என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஃப்ரீயாக டியூஷன் சென்டர் நடத்துவது முழுமூச்சாக இறங்கியுள்ளேன். என நம்மிடைய அனைத்தையும் பகிர்ந்தார் விமல்

Advertisement