ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான காலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த வனத்தில் பல்வேறு புதுமுகங்கள் நடித்து இருந்தனர். அதில் ரஜினியின் இளைய மகன் காதலியாக நடித்தவர் நடிகை அஞ்சலி பாட்டில். இந்த படத்தில் மிகவும் தைரியமாக பெண்ணாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
மஹாஸ்டிர மாநிலத்தில் பிறந்த இவர், நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் தனது 14 வயதிலேயே புனேவில் உள்ள நடிப்பு பள்ளியில் சேர்ந்து நடிப்பைய முறையாக கற்றுக் கொண்டார். அதன் பின்னர் டெல்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் தனது முதுகலைப் பட்டத்தை முடித்தார். படித்துக் கொண்டிருக்கும்போதே பல்வேறு சர்வதேச நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் பணியாற்ற இவருக்கு வாய்ப்பும் கிடைத்தது.
இவர் சினிமாவில் முதன்முறையாக அறிமுகமானது 2014 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘டெல்லி இன் எ டே’ என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தா.ர் அதுமட்டுமில்லாமல் 2014 ஆம் ஆண்டு வெளியான ‘பைண்டிங் பண்ணி’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் ஹாலிவுட்டிலும் வெளியாகி இருந்தது. மேலும், இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
2013ஆம் ஆண்டு நான் பங்காரு தள்ளி என்ற தெலுங்கு படத்திற்காக தேசிய விருதை வென்றுள்ளார். அதன் பின்னர் இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறந்த நடிகையாகவும் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இலங்கையில் கூட ஒரு சிங்களப் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்திற்காகவும் சிறந்த நடிகை என்ற பட்டத்தை பெற்றார்.
தனது சிறப்பான நடிப்பின் மூலம் பல்வேறு இயக்குனரின் கவனத்தை ஈர்த்த அஞ்சலி, காலா படத்தில் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக நடித்திருந்தார். அதேபோல நிஜத்திலும் இவர் மிகவும் போல்டான பெண்ணாகஇருந்து வருகிறார். சமீபத்தில் இவரது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.