எப்படி இருக்கிறது ‘ காலங்களில் அவள் வசந்தம்’ – முழு விமர்சனம் இதோ.

0
1611
kaalangal
- Advertisement -

இயக்குனர் ராகவ் மிர்தத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலங்களில் அவள் வசந்தம். இந்த படத்தில் கௌஷிக் ராம், அஞ்சலி நாயர், ஹெரோஷினி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை அறம் என்டர்டைன்மெண்ட், ஸ்ரீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசை அமைத்திருக்கிறார். தற்போது வெளியாகியிருக்கும் காலங்களில் அவள் வசந்தம் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ஷ்யாம் என்ற கதாபாத்திரத்தில் கௌசிக் ராம் நடித்திருக்கிறார். இவர் சினிமா படங்களில் வருவது போன்றே நிஜ வாழ்க்கையிலும் காதல் வரும் என்று இருக்கிறார். ஷ்யாம் உடைய வெள்ளந்தி குணத்தை பார்த்து அஞ்சலி நாயர் திருமணம் செய்து கொள்கிறார். சினிமாவில் வருவதைப் போலவே நிஜ வாழ்க்கையில் தங்களுடைய திருமண வாழ்க்கையை நினைத்து வாழ நினைக்கிறார் ஷ்யாம். ஆனால், எதார்த்த வாழ்க்கை இதுதான் என்று புரிய வைக்கிறார் அஞ்சலி நாயர்.

- Advertisement -

இதனால் இருவருக்குள் ஈகோ, சண்டை என பிரச்சனை ஏற்படுகிறது. இறுதியில் அஞ்சலி நாயர் உலகின் எதார்த்தத்தை தன் கணவருக்கு புரிய வைத்தாரா? ஷ்யாம் சினிமாவிற்கும், நிஜ வாழ்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டாரா? இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் படத்தின் மீதி கதை. படத்தில் கௌசிக் ராம் சினிமாவின் காதலுக்கும், நிஜ காதலுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத அப்பாவி, வெள்ளந்தியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவரை எப்படியாவது மாற்றி உலகின் எதார்த்தத்தை புரிய வைக்க முயற்சியில் அஞ்சலி நாயருடைய முயற்சி பாராட்டுகளை பெற்றிருக்கிறது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அழகாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். சினிமேடிக் காதலை
மக்களுக்கு புரிய வைக்கும் விதத்தில் இயக்குனர் எடுத்திருக்கும் முயற்சி பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
சினிமா மீது இருந்த தாக்கத்தினால் நாயகன் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அவன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை அழகாக காண்பித்திருக்கிறார்கள். படத்தில் பலர் புதுமுகங்கள் இருந்தாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இளைஞர்களை கவரும் விதமாக இயக்குனர் இந்த படத்தை எடுத்து இருக்கிறார். அதிலும் படத்தில் பல இடங்களில் மணிரத்தினரின் சாயல் தெரிகிறது என்று சொல்லலாம். படத்திற்கு ஒளிப்பதிவும், பின்னணி இசையும் பக்கபலமாக இருக்கிறது. முதல் பாதி நன்றாக சென்று கொண்டிருந்தது. இரண்டாம் பாதியில் தேவையில்லாத சில காட்சிகளை நீக்கி இருந்தால் நன்றாக இருக்கும். அதோடு எளிமையான கதையை இயக்குனர் ரொம்பவே சுத்தி வளைத்து சொல்லி இருப்பது கொஞ்சம் சலிப்பை தட்டி இருக்கிறது.
மொத்தத்தில் இளைஞர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைகள் :

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதைக்களம் நன்றாக இருக்கிறது.

இயக்குனர் கொண்டு சென்ற விதமும் சிறப்பாக இருக்கிறது.

ஒளிப்பதிவும் பின்னணி செய்யும் படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது.

குறைகள் :

இரண்டாம் பாதியில் தேவையில்லாத சில காட்சிகளை நீக்கி இருக்கலாம். இன்னும் படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்திருக்கும்.

எளிமையான கதையை இயக்குனர் சுத்தி வளைத்து சொல்லியிருப்பது தான் கொஞ்சம் சலிப்பை தட்டி இருக்கிறது.

இளைஞர்களை இந்த படம் கவரும்.

மொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் – காதல் நினைவுகள்

Advertisement