வெள்ளித்திரை படங்களை பார்க்கும் ரசிகர்கள் விட சின்னத்திரை சீரியல்களை பார்க்கும் ரசிகர் கூட்டம் தான் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சமீப காலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிரியர்கள் எல்லாம் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஒவ்வொரும் சேனல்களும் தங்களுடைய சேனலின் டி.ஆர்.பி. ரேடிங்க்காக புது புது முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவி எப்போதுமே புதுசு புதுசா சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வரும். இப்போது சீரியல்களில் ஒரு புது முயற்சியும் கொண்டு வந்து உள்ளது விஜய் டிவி.
விஜய் டிவியில் பல்வேறு வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த சீரியல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விஜய் டிவி நிறுவனம் “அரண்மனைக்கிளி, காற்றின் மொழி” என்ற இரு சீரியல்களிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எப்போதுமே சீரியல்கள் அரை மணி நேரம் மட்டும் தான் ஒளிபரப்புவார்கள். அதோடு சிறப்பு நிகழ்ச்சி, சிறப்பு காட்சி என்றால் ஒரு மணி நேரம் ,முக்கால் மணி நேரம் என்று ஒளிபரப்புவது வழக்கம்.
இதையும் பாருங்க : இயக்குனர் மீது ‘மீடு’ புகார் அளித்ததால் ஷாலு ஷம்முவிற்கு ஏற்பட்ட நிலை. புலம்பும் நடிகை.
ஆனால், தற்போது இந்த காற்றின் மொழி மற்றும் அரண்மனைக்கிளி ஆகிய இரண்டு தொடர்கள் மட்டும் இனி வரும் காலங்களில் 45 நிமிடம் ஒளிபரப்பு செய்யப்படும் நிறுவனம் அறிவித்து உள்ளது. மேலும், காற்றின் மொழி என்ற தொடர் சமீப காலமாகத் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் வந்த குறுகிய காலத்திலேயே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ராஜாராணி சீரியல் நாயகன் சஞ்சய், பிரியங்கா ஜெயின் இந்த சீரியலில் ஹீரோ,ஹீரோயினாக நடிக்கிறார்கள். இது வாய் பேச முடியாத, தனது தந்தையின் பாசத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கதையாகும்.
இந்த தொடர் இனி வரும் காலங்களில் 9 மணி முதல் 9.45 வரை ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவித்து உள்ளார்கள். 2018 ஆம் ஆண்டு “அரண்மனைக்கிளி” சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீரியலை அணில் என்பவர் இயக்கினார். இந்த சீரியலில் மோனிஷா, சூரிய தர்ஷன், பிரகதி, நீலிமா ராணி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளியான ஹீரோ அர்ஜுனுக்கும், அவன் தாய் மீனாட்சிக்கும் ஜானவி என்ற பெண்ணை சுத்தமாக பிடிக்காது. பின் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அர்ஜுனுக்கு, ஜானுவுடன் திருமணம் ஏற்படுகிறது. அந்த வீட்டுக்கு ஜானு வந்த உடன் பல கஷ்டங்களை அனுபவிக்கிறாள்.
மேலும், ஜானுவை அவர்கள் வாழ்க்கையில் ஏற்று கொள்கிறார்களா? என்பது தான் கதையின் சுவாரசியம். இந்த அரண்மனை தொடரில் தற்போது ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்து உள்ளார்கள். அது என்னவென்றால், அரண்மனைக்கிளி 9. 45 முதல் 10.30 வரை இனி வரும் காலங்களில் ஒளிபரப்பாகும் என்று அறிவித்து உள்ளார்கள். இதனால் சீரியல் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷியில் உள்ளார்கள். பின் பலர் ஏன் இந்த இரண்டு சீரியலில் மட்டும் மாற்றத்தை கொண்டு வந்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.