நாம் மன அழுத்தத்தில் இருந்தது உண்மை தான், தற்கொலை சர்ச்சைக்கு புலி வெளியிட்ட வீடியோ.

0
459
- Advertisement -

நான் தற்கொலை முயற்சி செய்யவில்லை என்று காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அண்ணன் – தம்பி, கணவன் – மனைவி, காதல் ஜோடி, புதுமண தம்பதி என பலவிதவிதமான கான்செப்ட்களில் விஜய் தொலைக்காட்சியில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் இளைஞர்களை மிகவும் கவர்ந்த தொடராக உள்ளது.

-விளம்பரம்-

இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தற்போது இந்த தொடர் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் தொடர் ஆக மாறி இருக்கிறது. இந்த தொடரில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் பிரியங்கா நடித்து வருகின்றார். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கும் வெண்ணிலாவுக்கு அவருடைய அப்பா கல்யாண ஏற்பாடு செய்கிறார். ஆனால், வெண்ணிலா கல்யாண நாளன்று வீட்டை விட்டு வெளியேறி தன் கனவை நனவாக்க போராடுகிறார். பின் வெண்ணிலாவுக்கு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது. இருந்தும் ஹீரோ வெண்ணிலாவுக்கு உறுதுணையாக நிற்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரபல டபுள் மீனிங் மன்னன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்னவானார் தெரியுமா ? பலர் அறிந்திராத தகவல்.

ராகவேந்திரன் குறித்த தகவல்:

இடையில் இந்த சீரியல் இருந்து கதாநாயகன் விலகி இருந்தார். பின் ஹீரோ அம்மா, பெரியம்மா என்று பல நடிகர்கள் விலகி இருந்தார்கள். இருந்தாலும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் சூர்யா- வெண்ணிலா இருவருக்கும் மத்தியில் காதல் மலர்ந்திருக்கிறது. இந்த நிலையில் காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகர் வெளியிட்ட வீடியோ வைரலலாகி வருகிறது. இந்த சீரியலில் வெண்ணிலாவின் கல்லூரி நண்பன் மாறன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தவர் ராகவேந்திரன். இவர் விஜய் டிவியில் பிரபலமான கனா காணும் காலங்கள் தொடரில் புலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் பின் இவர் சில சீரியல்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

ராகவேந்திரன் அளித்த பேட்டி:

பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து இருந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருந்தார். அதன் பிறகு சமீபத்தில் அளித்த பேட்டியில் இவருக்கு சீரியலில் சம்பளம் குறைப்பு, வாய்ப்பு இல்லை, ரோலில் முக்கியத்துவம் இல்லை என பல காரணங்களை சுட்டிக்காட்டி விலகி இருந்தார். சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த இவர் தண்ணீர் கேன் போடும் வேலைக்கு செல்வதாகவும், சினிமா தன்னை ஏமாற்றி விட்டதாகவும் உருக்கமாக தெரிவித்திருந்தார். அது மட்டுமில்லாமல் இவர் பல ஏமாற்றங்களை சந்தித்து மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ராகவேந்திரன் வெளியிட்ட வீடியோ:

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ராகவேந்திரன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியப்படி வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் ஒருதலைக்காதல் தோல்வி என்பது போல் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி இருந்தது. இதற்கு பலரும் ஆறுதல் கூறி இருந்தார்கள். ஆனால், அதற்குள் அவர் தற்கொலை முயற்சி செய்து ஆஸ்பிடல் இருப்பதாக வதந்திகள் இணையத்தில் வைரல் ஆனது. அதை அவர் ஜாலியாக தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட போஸ்டை சீரியஸான விஷயமாக மாற்றி விட்டார்கள். இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது ராகவேந்திரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மற்றொரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ராகவேந்திரன் வெளியிட்ட மற்றொரு வீடியோ:

அதில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் பிரேக் அப் என்று நான் வெளியிட்ட வீடியோ ஜாலியாக செய்தது. அதற்காக நான் தற்கொலை முயற்சி செய்து ஹாஸ்பிடல் இருக்கிறேன் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் வெளியாகி இருக்கின்றது. அதை பார்த்து நான் ஷாக் ஆகி விட்டேன். என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் அதைப் படித்துவிட்டு நொந்து போனார்கள். நான் ஏன் தற்கொலை முயற்சி செய்ய வேண்டும். அதுவும் இது போன்ற விஷயத்துக்காக நிச்சயம் கிடையாது. இது வதந்தி மட்டுமே யாரும் நம்ப வேண்டாம். நான் டிப்ரஷன்ல இருப்பது உண்மை தான். ஆனால், தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை. இதுபோன்ற தவறான தகவலை பரப்பாதீர்கள். இது பலருக்கும் தவறான உதாரணமாக மாறிவிடும் என்று கூறியிருக்கிறார்.

Advertisement