அதனையடுத்து மலையாளத்தில் 2005 வெளியான மயோகம் என்ற படத்தில் நடித்தார் அதன் பிறகு தனது பட்டப்படிப்பை முடிப்பதற்காக சினிமாவில் இருந்து சில காலம் விலகியிருந்தார்.பின்னர் தமிழில் 2008 வெளியான சாது மிரண்டால் என்ற படத்தில் பிரசன்னாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதன் பிறகு சூரியன் சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,புத்தனின் சிரிப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் மலையாள படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை.தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர முடியவில்லை ஆதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்து வந்தார்.
அதன் பின்னர் தொலைக்காட்சி நாடங்களில் நடிக்கத்தொடங்கிவிட்டார்.ஜீ தமிழ் தொலைகட்சியில் பிரியசகி என்ற மெகா தொடரில் நடிகத்துவங்கினர் அதுமட்டும் இல்லாமல் தற்போது சன் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ரேவதி,நாசர் நடித்து வரும் அழகி என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார் மித்ரா.
காவலன் படத்தில் ஒல்லியாக இருந்த இவர் தற்போது அந்த சீரியலில் மிகவும் குண்டாக காவலன் படத்தில் நடித்தவரா இவர் என்ற அளவுக்கு மாறியிருக்கிறார்.




