சமூக வலைத்தளங்களில் பல மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து உலகளவில் பிரபலமாகி வரும் பாடல் ‘கச்சா பாதாம்’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த பாடல் எந்தளவிற்கு பதிவாகி வருகிறதோ அதே அளவிற்கு இந்த பாடலை பாடிய ‘பூபன் பத்யாகர்’ என்பவரும் பிரபலம் ஆகி வருகிறார். மேற்கு வங்காள மாநிலத்தில் குரல்ஜூரி எனும் கிராமத்தில் சைக்கிளில் வேர்க்கடலை விற்று வருபவர் தான் பூபன் பத்யாகர். இவர் எப்போதும் பாடல் பாடிக் கொண்டே தான் வேர்கடலையை விட்டு வருவார். அப்படி ஒருநாள் இவர் வேர்க்கடலை விற்றுக் கொண்டிருக்கும் போது கச்சா பாதம் என்று வாயில் முணுமுணுத்து பாடி இருந்தார்.
இப்படி இவர் இந்த பாடலை பாடி கொண்டு இருக்கும் போது அந்த கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருக்கிறார். அதற்கு பின் அவரது கிராம மக்கள் மட்டுமே கேட்ட ரசித்த இந்த பாடலை உலகம் முழுவதும் மக்கள் கேட்டு இரசிக்க தொடங்கினார்கள். மேலும், இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து ரான்-இ மற்றும் பிரக்யா டுட்டா(Ron-E & pragya dutta) ஆகிய இருவரும் பூபன் பத்யாகரை அழைத்து இந்த பாடலை பாட வைத்தனர்.
பூபன் பத்யாகர் பாடல்:
பின் அவருடைய குரலிலேயே அவரது பாடலை காட்சி படித்து ஆல்பம் சாங்காக கச்சா பாதாம் என்ற பாடலை வெளியிட்டார்கள். இது உலகம் முழுவதும் வெளியாகி பல மில்லியன்களை கடந்து இன்னும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தமிழில் கூட வடிவேலு வெர்சன் போன்ற பல வரிசைகளில் இந்த பாடல் ஹிட் அடித்து வருகிறது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் என அனைத்து சோசியல் மீடியாவில் இந்த பாடலுக்கு நடனம் ஆடியும், இமிடேட் செய்து பல வீடியோக்கள் வெளியாகி வருகிறது.
பூபன் பத்யாகர் பாடலை இமிடேட் செய்த பிரபல நடிகர் மகள்:
அந்த வகையில் சமீபத்தில் கூட பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா இந்த பாடலை இமிடேட் செய்து நடனமாடி வீடியோவை வெளியிட்டிருந்தார். இப்படி சாதாரணமாக ஒரு வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்த வியாபாரி கச்சா பாதாம் என்ற ஒரே பாடலின் மூலம் இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் மிகப் பிரபலமாகி வருகிறார். மேலும், இவருடைய பாடலைப் பார்த்த மேற்கு வங்காள காவல்துறை அதிகாரிகள் இவரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்கள்.
பூபன் பத்யாகர் அளித்த பேட்டி:
இது குறித்து பூபன் பத்யாகர் கூறியிருப்பது, நான் கனவில் கூட இந்த மாதிரி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இதற்காக பாலிவுட்டில் எல்லாம் என்னை யாரும் அணுகவில்லை. எனக்கு இந்தி எல்லாம் தெரியாது. என்னுடைய பாடலை யார் யாரோ சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். அதன்மூலம் எனக்கு எந்த ஒரு லாபமும் இல்லை. எனவே பாடலுக்கு காப்பிரைட் வாங்க போறேன் என்று பேசியிருந்தார்.
பூபன் பத்யாகரின் அடுத்த பாடல்:
இப்படி ஒரே பாடலில் பிரபலமான பூபன் பத்யாகர் தன்னுடைய அடுத்த பாடலை சவ்ரவ் கங்குலி உடன் சேர்ந்து பாடி நடிக்க போவதாகவும் இந்த பாடல் பிப்ரவரி 19ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியானது. இந்த தகவல் வெளியானவுடன் இவர் வேர் கடலை வியாபாரத்தை மூட்டை கட்டி விட்டு முழுநேர பாடகர் ஆகி விட்டார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். அதோடு சமூக வலைத்தளமும் இது போன்ற சாமானிய மக்களின் திறமைகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாகவும் வளர்ந்து வருகிறது.