இப்போதைக்கு அதைப்பற்றி பேச விரும்பவில்லை .அது என் பர்சனல்-நஸீம்.

0
18740
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் “பகல் நிலவு” சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. பின் 2019ஆம் ஆண்டு முடிவடைந்தது. இந்த தொடர் ஆண்டாள் அழகர் என்ற தொடரின் இரண்டாம் பாகம் ஆகும். இந்த தொடரை ரவிப்ரியன் என்பவர் இயக்கினார். மேலும், இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முகமது அசிம் நடித்து இருந்தார். நடிகை சிவானி இவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர்கள் இருவருக்காகவே இந்த சீரியலை பார்க்க ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு இவர்களுடைய ரொமான்ஸ் இருக்கும்.

-விளம்பரம்-
மகனுடன் அசிம்

- Advertisement -

இவர்களுடன் இந்த சீரியலில் ஷாம், உதய் மகேஷ், ஷர்மிளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த சீரியல் முடிவடையும் போது பலரும் வருத்தப்பட்டார்கள் என்று சொல்லலாம். இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்த முகமது அசிம் அவர்கள் சென்னையை சேர்ந்தவர். இவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தவர். இவருக்கு நடிப்பு மட்டும் இல்லாமல் நடனம், பாட்டு, காமெடி, தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி உள்ளார். இவர் முதன் முதலாக 2008 ஆம் ஆண்டு ஜீ தமில் வி.ஜே.வாக தான் சின்ன திரை உலகில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : அஜித்தின் திரை பயணத்திலேயே இன்று ஒரு ஸ்பெஷலான நாள். என்னனு பாருங்க.

பின் பகல் நிலவு சீரியல் அர்ஜுன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார் என்று கூட சொல்லலாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே அஸீமிற்கு ஸோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் தனது இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதுகுறித்து பிரபல பத்திரிக்கை ஒன்றிருக்கு பேட்டி அளித்துள்ள அவர், சமீபத்தில் என்னை பற்றிய ஒரு செய்தி வைரலாகி பரவுவது அதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானேன்.

-விளம்பரம்-

இப்போதைக்கு அதைப்பற்றி பேச விரும்பவில்லை .அது என் பர்சனல் எந்த பிரச்சினை வந்தாலும் என் மகன் தான் என் உலகம் அவன் மட்டும் போதும். என் மகனின் எதிர்காலம் எனக்கு முக்கியம். அவனின் பிறந்தநாள் சமீபத்தில்தான் முடிந்தது அதற்காகத்தான் அவருடைய புகைப்படத்தை பகிர்ந்திருந்தேன். அவனைத் தவிர எனக்கு யாரும் முக்கியம் இல்லை என்று இந்த உலகத்திற்கு செல்வதற்காக தான் அந்த புகைப்படத்தை பதிவிட்டேன் என்று கூறியுள்ளார் அசீம்.

Advertisement