தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்துள்ளார் .நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியகியுள்ளது.
Happy to share the theatrical trailer of #KadaikuttySingam And it’s censored as U.https://t.co/KwQumOiUL0 @Suriya_offl @pandiraj_dir @immancomposer @2D_ENTPVTLTD
— Actor Karthi (@Karthi_Offl) July 6, 2018
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக “வனமகன்” பட நாயகி ஷேய்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் “மேயாதமான் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கரம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
முற்றிலும் கிராமத்து கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பேமிலி, சென்டிமெண்ட், கிராமத்து சண்டை காட்சிகள் என்று கமெர்சியல் அம்சங்கள் நிறைந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ஜாதி சண்டை பற்றிய பிரச்சனைகள் குறித்தும் பேசியுள்ளனர் என்பது ட்ரைலரில் இருந்து தெரிகிறது.
மொத்தத்தில் ஒரு நல்ல பேமிலி கமெர்ஷியல் படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இந்த படம் வரும் இம்மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.