ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்த கடாரம் கொண்டான் செகண்ட லுக்..!கூடவே டீஸர் தேதி அறிவிப்பு..!

0
976
Vikram
- Advertisement -

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாமி-2’ படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல் தயாரப்பில் ‘கடாரம் கொண்டான் ‘ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரமின் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் படியுங்க : விக்ரம் துருவநட்சத்திரம் படப்பிடிப்பின் முக்கிய தகவல் வெளியானது..! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணம் விக்ரம் அந்த படத்தில் வைத்துள்ள கேட்டப்தான். இந்நிலையில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது என்று இந்த போஸ்டர் மூலம் தெரிகிறது. மேலும், படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஜனவரி 15-ம் தேதி படத்தின் டீசர் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

-விளம்பரம்-

Advertisement