சத்தமில்லாமல் வெளியான ‘கடாராம் கொண்டான்’ படத்தின் ட்ரைலர் அறிவிப்பு.!

0
2286
Kadaram Kondan
- Advertisement -

சமீப காலமாக சூப்பர் ஹிட் படத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சாமி-2’ படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கமல் தயாரப்பில் ‘கடாரம் கொண்டான் ‘ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரமின் ஜோடியாக கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் இவர்தான்.! லாஸ்லியா கூட ஒட்டு போடல.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதற்கு முக்கிய காரணம் விக்ரம் அந்த படத்தில் வைத்துள்ள கெட்டப்தான். அதே போல கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும்வெளியானது.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது என்று இந்த போஸ்டர் மூலம்உறுதியானது. மேலும், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இந்த படத்தின் டீஸர் வெளியான நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் ஜூலை 3 ஆம் தேதி வெளியிட போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement