காதல் கோட்டை படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்ததாம்.! பாத்தா ஷாக் ஆவீங்க.! புகைப்படம் உள்ளே.!

0
1959
kadhal-kottai

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பல்வேறு ஹிட் படங்கள் வந்திருக்கின்றது. அதில் ஒரு சில நடிகர்கள் தவறவிட்ட படத்தில் கூட அஜித் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக இன்று வரை கருதக் கூடிய படங்களில் “காதல் கோட்டை ” படமும் உண்டு.

kadhal-kottai

1996 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித், தேவயானி, ஹீரா போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அஜித்திற்கு நல்ல திருப்புமுனை படமாக அமைந்த இந்த படத்தில் முதன் முதலில் கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் என்பவர் தான் நடிக்கவிருந்தாராம்.

நடிகர் அபிஷேக், கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சியமானார். ஆனால், அதற்கு முன்னாள் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் ‘காதல் கோட்டை’ படத்தில் முதன் முதலில் நடித்து வந்தாராம் . கிட்ட தட்ட பாதி படம் முடிந்த நிலையில் சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

Abishek

அதனால், இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் அகத்தியன் மீண்டும் புதிதாக எடுத்து வெளியிட, படம் ஏகோபித்த ஹிட் அடைந்தது. இந்த படத்தை பார்த்த நடிகர் அபிஷேக் , இப்படி ஒரு படத்தை மிஸ் செய்து விட்டோம் என்று நடு ரோட்டியில் கதறி அழுதாராம்.இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.