காதல் கொண்டேன் பட நடிகர் “சுதீப் சரங்கி” என்ன ஆனார் தெரியுமா ?தற்போதைய நிலை .!

0
7505

நடிகர் தனுஷ் நடிப்பில் 2003 இல் வெளியான காதல் கொண்டேன் படத்தில் சோனியா அகர்வால் காதலனாக நடித்தவர் சுதீப் சரங்கி.கொல்கத்தாவில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டு பல ராம்ப் வால்க் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வந்தார்.

Devathaiyai-Kandaen

பின்னர் நடிப்பில் ஆர்வம் ஏற்பட ஏற் கூத்து பட்டறையில் சேர்ந்து பல மேடை நாடகங்கள் மற்றும் ஹிந்தி பெங்காலி படங்களில் நடித்தார்.2003 இல் செல்வராகவன் இவருக்கு காதல் கொண்டேன் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார்.

அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.அதன் பின்னர் 2004 இல் வெளியான என்னமோ புடிச்சிருக்கு என்ற படத்தில் நடித்தார். அந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தரவில்லை.

actor sudeep

பின்னர் பெங்காலி,ஹிந்தி துறையில் கவனத்தை செலுத்தினர்.2005 இல் தும் சலாம் என்னும் படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதன் பின்னர் படவாய்ப்புகள் வராததால் டீவி சீரியல்களில் நடிக்க துவங்கினர்.ஹிந்தியில் இவர் நடித்த பாபா ஐசோ வர் தூண்டூ,சிஐடி போன்ற சீரியல்கள் இவருக்கு பிரபலத்தை பெற்றுதந்தது.

அதன் பிறகு 2015 இல் வெளியான குந்து கி கன் மற்றும் 2017 இல் வெளியான ராணுவ வரலாற்றை மையப்படுத்தி எடுக்கபட்ட ராக் தேஸ் போன்ற படங்களில் நடித்தார்.

sudeep

இவர் சகாரா ஒன் ஹான்டட் நைட்ஸ் என்ற படத்தில் பெண் வேடம் அணிந்து நடித்திருப்பார். இந்த வேடம் அனைவராலும் பாராட்டப்பட்டது. தற்போது ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார் சுதீப்.

sudeep-sarangi

sudeep-actre

தற்போது 2018 இல் வெளியாகவிருக்கும் ஜாக் அன் தில் மற்றும் மிலன் டாகிஸ் படங்களில் நடித்து விட்டு குடும்பத்துடன் தற்போது மும்பையில் வசித்து வருகிறார் சுதீப் சரங்கி.