ரஜினியின் தங்கையாக நடிக்க வேண்டும் என்று காதல் கோட்டை பட வாய்ப்பை நிராகரித்துள்ள விஜய் பட நடிகை – இன்னிக்கி அட்ரஸ்ஸே இல்ல.

0
8044
anju
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் பல்வேறு ஹிட் படங்கள் வந்திருக்கின்றது. அதில் ஒரு சில நடிகர்கள் தவறவிட்ட படத்தில் கூட அஜித் நடித்துள்ளார். அந்த வகையில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக இன்று வரை கருதக் கூடிய படங்களில் “காதல் கோட்டை ” படமும் உண்டு.1996 ஆம் ஆண்டு இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித், தேவயானி, ஹீரா போன்றவர்கள் நடித்திருப்பார்கள். அஜித்திற்கு நல்ல திருப்புமுனை படமாக அமைந்த இந்த படத்தில் முதன் முதலில் கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் என்பவர் தான் நடிக்கவிருந்தாராம்.

-விளம்பரம்-

நடிகர் அபிஷேக், கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பரிட்சியமானார். ஆனால், அதற்கு முன்னாள் பல படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் ‘காதல் கோட்டை’ படத்தில் முதன் முதலில் நடித்து வந்தாராம் . கிட்ட தட்ட பாதி படம் முடிந்த நிலையில் சில பல பிரச்சனைகளால் அபிஷேக், படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

- Advertisement -

அதனால், இந்த படத்தை நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் அகத்தியன் மீண்டும் புதிதாக எடுத்து வெளியிட, படம் ஏகோபித்த ஹிட் அடைந்தது. அதே போல இந்த படத்தில் அஜித்தின் ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். ஆனால், அவருக்கு பதிலாக இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை அஞ்சு அரவிந்த் தானாம். இவர் சினிமாத்துறையில் 1991 ஆம் ஆண்டு “வேனு கனவு ” என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக முதன்முதலில் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.பின்னர் திரை உலகிற்கு வந்த உடன் பல துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

வீடியோவில் 10:30 நிமித்தில் பார்க்கவும்

மேலும், இவர் விஜய் நடித்த பூவே உனக்காக படத்தில் விஜய்யின் ஒன் சைட் லவ்வராக நடித்திருப்பார். இந்த படத்தின் அஞ்சு அரவிந்த் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமானார்.மேலும், இதுதான் தமிழில் அவருடைய முதல் திரைப்படமாகும். அதன் பின்னர் தமிழில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர், எனக்கு ஒரு மகன் பிறப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் அஞ்சு அரவிந்த். ஆனால், இவர் காதல் கோட்டை படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிக்க வேண்டியது. அந்த சமயத்தில் அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் காதல் கோட்டை பட வாய்ப்பை கைவிட்டுள்ளார் அஞ்சு அரவிந்த்

-விளம்பரம்-
Advertisement