“காதலர் தினம்” பட நடிகையா இது , இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
7263
kadhalar-dinam-sonali-bandre

கடந்த 1999ஆம் ஆண்டு நடிகர் குனால் நடித்த காதலர் தினம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாலி பான்ட்ரி. இந்த படத்தில் நடிக்கும் முன்பே பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனாலி.

kadhalar dhinam

கடந்த 1975ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சோனாலி. காதலர் தினம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும், 1994முதல் ஷாருக்கான், சல்மான்கான், ஆமீர்கான், சயீப் அலிகான் என அனைத்து முன்னணி ஹீரோக்களிடனும் நடித்தவர் சோனாலி.

முதலில் 1995ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பாம்பே படத்தில் ஒரு பெப்பி சாங்கிற்கு டான்ஸ் ஆடியிருப்பார். அதன்பின்னர் தான் 1999ஆம் ஆண்டு காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

Actress-sonali-bandre

Sonali-Bendr

sonali-bendre

அதே ஆண்டு அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழில் அவர் நடிக்கவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டு கோல்டி பெல் எனும் இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்கவில்லை. சோனாலி கடந்த 2012ஆம் ஆண்டு கடைசியாக One Upon A Time In Mumbai Dobra என்னும் ஹிந்தி படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தார்.

Sonali-bandre-family

sonali-bendre-Actress

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த சோனாலி. தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். இருந்தும்.இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்து வருகிறார்.