ஒரே படத்தில் நடித்துள்ள கெளதம் மேனன் மற்றும் அவரின் தந்தை – எந்த படம் தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
1704
Gvm
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 2-12.jpg

அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கினார் கௌதம் மேனன். மேலும், கவுதம் மேனன் இயக்குனர் ஆவதற்கு முன்பாக ‘மின்சார கனவு’ படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருப்பார். அதே போலத்தான் கௌதம் மேனனின் தந்தையும் சினிமாவில் நடிக்கும் ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் கௌதம் மேனன்.

இதையும் பாருங்க :ருத்ரதாண்டவம் குறித்து பேசிய நித்யாநந்தாவின் வீடியோவை பகிர்ந்த மோகன். (நல்ல promotion தந்திரம் தான்)

- Advertisement -

அதுவும் உலக நாயகன் கமல் படத்தில் தான். கௌதம் மேனனின் தந்தை கமலின் தீவிர ரசிகர். அவரது ஆசையை நிறைவேற்ற வேட்டையாடு விளையாடு படத்தில் சில காட்சிகளை வீட்டிலேயே எடுத்து தனது தந்தையை பார்க்க செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் இடம்பெறும் முதல் பாடலான கற்க கற்க பாடலில் வரும் இறுதிக்காட்சியில் கவுதம் மேனன் தந்தையை நடிக்க வைத்திருக்கிறார்.

அதே போல இதே படத்தில் வரும் ‘வெண்ணிலவே ‘ கெளதம் மேனன் ஒரு சில காட்சியில் நடித்து இருப்பார். இந்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது 2007 ஆம் ஆண்டு கௌதம் மேனனின் தந்தை காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கௌதம் மேனன் தனது தந்தையின் வாழ்க்கையை மையமாக வைத்துதான் வாரணம் ஆயிரம் திரைப்படத்தை எடுத்தார். அந்த படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவின் இன்ஸ்பிரேஷன் கௌதம்மேனன் தந்தைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement