17 ஆண்டுக்கு முன் விஜய் படத்தில் குழந்தை நட்சத்திரம், தற்போது மாஸ்டர் படத்தில். மாஸ்டர் மஹிந்திரன் இல்லங்க, யார்னு பாருங்க.

0
24357
udhay
- Advertisement -

தமிழ் திரையுலகில் 2003-ஆம் ஆண்டு வெளி வந்த ‘ஆயுதம், திருடா திருடி’ ஆகிய இரண்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் நடிகர் உதய் ராஜ். இதில் ‘ஆயுதம்’ படத்தில் ஹீரோவாக ‘டாப் ஸ்டார்’ பிரஷாந்தும், ‘திருடா திருடி’ படத்தில் கதாநாயகனாக தனுஷும் நடித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ‘தளபதி’ விஜய் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு நடிகர் உதய் ராஜுக்கு கிடைத்தது. ஆம்.. அந்த படம் தான் ‘திருமலை’.

-விளம்பரம்-
George Maryan

இந்த படத்தினை பிரபல இயக்குநர் ரமணா இயக்கியிருந்தார். இதில் நடிகர் உதய் ராஜ் குழந்தை நட்சத்திரமாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். ‘திருமலை’ படத்துக்கு பிறகு 2010-ஆம் ஆண்டு வெளி வந்த ‘பாணா காத்தாடி’ படத்தில் உதய் ராஜ் நடித்திருந்தார். அதில் அதர்வா, சமந்தா ஜோடியாக நடித்திருந்தனர். அதர்வாவின் நண்பராக உதய் ராஜ் வலம் வந்திருந்தார்.

- Advertisement -

கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கார்த்தியின் ‘கைதி’ படத்திலும், உதய் ராஜ் மிக முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் உதய் ராஜின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தற்போது, சமூக வலைத்தளமான ட்விட்டரில் என்ட்ரியாகியிருக்கிறார் நடிகர் உதய் ராஜ். அவரின் முதல் ஸ்டேட்டஸ் ‘தளபதி’ விஜய் பற்றியது தான்.

ஆம்.. தான் ‘திருமலை’ படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து பேசிய உதய் ராஜ், இப்போது 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் ‘மாஸ்டர்’ படத்தில் இனைந்து நடித்துள்ளேன். எனக்கு அந்த வாய்ப்பினை வழங்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார். ‘மாஸ்டர்’ படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

‘தளபதி’ விஜய்யும் – ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் இணைந்து நடித்திருக்கும் முதல் படம் இது தானாம். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கான ஷூட்டிங் முற்றிலும் ஏற்கனவே நிறைவு பெற்றது. இதன் இறுதிக்கட்ட வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. ஆகையால், தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்த பிறகு, ‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement