கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, சூட்டோடு சூடாக இராண்டாம் பாகத்தின் அறிவிப்பு. ரசிகர்கள் குஷி.

0
7884
karthi
- Advertisement -

மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியிருந்தார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று(அக்டோபர் 12) வெளியான இந்தப்படம் இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்திற்கு போட்டியாக களம் இறங்கியது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகரான விஜயின் படத்திற்கு போட்டியாக எந்த படம் வெளியான போதிலும் திகில் படத்தை விட இந்த படத்திற்கு தான் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்தவண்ணம் இருக்கிறது மேலும் பிகில் படத்தை விட தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் மட்டுமே கைதி திரைப்படம் திரையிடப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால் தொடர்ந்து இந்த படத்திற்கு கிடைத்து வரும் நல்ல விமர்சனங்கள் காரணமாக இந்த படத்தின் காட்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் கூட அதிகரித்து வருகின்றனர். கார்த்தி, நரேன், ஜார்ஜ், ரமணா, மகானதி சங்கர் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகி, பாடல், ரொமான்ஸ் என்று எதுவுமே கிடையாது என்பது தான் இந்த படத்தில் கவனிக்கப்படவேண்டிய விஷயம். மேலும், வெறும் 48 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதையும் பாருங்க : விஜய்யின் பிகில் படத்திற்கு நடுவே ‘துப்பாக்கி 2 ‘ குறித்து ட்வீட் செய்த பிரபலம். ரசிகர்கள் குஷி.

- Advertisement -

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. இந்த படத்தின் இறுதி காட்சியில், யார்னே அவன், சம்பந்தமே இல்லாம உள்ள புகுந்து எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான் என்று ஒருநபர் கேள்வி கேட்கும் போது ” சம்பந்தம் இருக்கு, அவன் பேரு டெல்லி..” என்று வரும் வசனத்தோடு படம் நிறைவு பெரும். எனவே, இந்த வசனத்தை வைத்து பார்க்கும் போது கைதி படத்தின் இரண்டாம் பாகம் இருக்குமோ என்று ரசிகர்கள் எண்ணி வந்தனர். ஆனால், தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது.

சமீபத்தில் கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் கைதி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டதோடு அதில், இந்தப் படத்திற்கு நீங்கள் கொடுத்த வீரர்களுக்கு மிக்க நன்றி இந்த படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணத்தையும் நான் மிகவும் விரும்பி இருந்தேன். கார்த்திக் சாருக்கும், பிரபு சாருக்கும் இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் என்னுடைய பதில் ஆம், தில்லி மீண்டும் வருவான் என்று ட்வீட் செய்திருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை குறித்துதான் லோகேஷ் கனகராஜ் இப்படி கூறியுள்ளாரா என்று ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதனை உறுதி செய்யும் விதமாக கைதி படத்தின் இசையமைப்பாளரான சாம் சி எஸ் சம்மந்தம் இருக்கு – அவன் பேரு டில்லி – அவன் திரும்பவும் வருவான் என்று பதிவிட்டிருந்தார். மேலும், இந்த படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்சும் தில்லி மீண்டும் வருவான் என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு இருந்தது. இந்த அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது கண்டிப்பாக கைது படத்தின் இரண்டாவது பாகம் வரும் என்று ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

மேலும், தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 64 வது படத்தில் பிசியாக இருந்து வருகிறார் ஒருவேளை இந்த படத்தை முடித்துவிட்டு கைதி படத்தின் இரண்டாவது பாகத்தை அவர் இயக்க திட்டமிட்டு இருக்கிறார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் ஆழமாக எழுந்துள்ளது. ஒருவேளை கைதி படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் அந்த படம் முதல் பாகத்தை விட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Advertisement