கைதி – விமர்சனம்

0
8429
kaithi
- Advertisement -

கார்த்திக் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் தான் கைதி. மேலும், கைதி படத்தை மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் இல்லை. மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளார்கள். அதோடு இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் அவர்கள் இசை அமைத்து உள்ளார். மேலும்,இந்த படத்தில், ’சித்திரம் பேசுதடி’ நரேன், யோகி பாபு, பொன்வண்ணன், மகாநதி சங்கர், ’தலைவாசல்’ விஜய் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்த படம் முழுக்க முழுக்க இரவிலேயே எடுக்கப்பட்ட ஆக்ஷன், திரில்லர் படமாக இருக்கிறது.அதுமட்டும் இல்லாமல் கைதி படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. டீசர் வெளியானதைத் தொடர்ந்து கைதி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வந்தது. மேலும்,இன்று திரையரங்குகளில் இப்படம் குறித்து ரசிகர்கள் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெறித்தனம் கைதி படத்தின் டீசரில் தெரிந்தது என்று கூறுகின்றனர்.

-விளம்பரம்-
kaithi"

கதைக்களம்:

- Advertisement -

கார்த்திக் நடிப்பில் வந்த “கைதி” படம் சிறை வாழ்க்கையை அனுபவித்த ஒரு மனிதனின் கதையை எடுத்துச் சொல்லும் படம் ஆகும். இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி, ஆக்ஷன், திரில்லர் காட்சிகளையே கொண்டு உருவாகியுள்ள படம் ஆகும். கைதி படத்தில் ஹீரோயின், பாடல்கள் எதுவும் இல்லாத கதைக்களமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர். மேலும், இந்த படம் ஒரு இரவில் நடக்கும் ஆக்ஷன் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கி இந்த வருட தீபாவளிக்கு ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் இயக்குனர். மேலும், கைதி படம் உலக நாயகன் கமலஹாசனின் ‘விருமாண்டி’ மற்றும் ஹாலிவுட் படமான’ டை ஹார்ட்’ ஆகிய இரண்டு படங்களின் முன் உதாரணமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் என்றும் தெரியவந்துள்ளது. தலைப்பிற்கு ஏற்றார்போல இந்த படத்தில் கார்த்தி சிறையிலிருந்து தப்பித்த ஒரு கைதியாக நடித்துள்ளார் என்பதை விட ஒரு கவிதையாகவே வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். வெறும் 62 நாட்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இந்த படத்தில் கதாநாயகி கிடையாது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

ஏனெனில் கார்த்திக்கு இந்தப் படத்தில் எந்த ஒரு ரொமான்ஸ் காட்சிகளும் கிடையாது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரைலர் வெளியான போதே இந்த படத்தில் ஆக்சன் மட்டும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டோம். மேலும், இந்த படத்தினை மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார் என்பதால் இந்த படத்தின் மீதான திரைக்கதையின் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. மேலும், இந்த கைதி திரைப்படம் 48 மணி நேரத்தில் நடக்கும் ஒரு கதை என்பதால் திரைக்கதையில் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகவும் சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தில் எந்தவொரு பாடல்கள் இல்லை என்றாலும் படத்திற்கு பின்னணி இசையை அமைத்துள்ள சாம் சி.எஸ். படத்தில் ஆக்சன் மற்றும் திரில்லர் காட்சிகளுக்கு ஏற்றார்போல பின்னணி இசையை பின்னி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும்.

-விளம்பரம்-
Image result for kaithi"

மேலும், சித்திரம் பேசுதடி படத்தில் நடித்த நரேன் இந்த படத்தில் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு காம்பே கொடுத்துள்ளார்.அதோடு இந்தப்படத்தில் மீண்டும் தனது அபாரமான நடிப்பை நிரூபித்திருக்கிறார் நரேன். இந்த படத்தை பிகில் போன்ற மாபெரும் ஒரு படத்திற்கு போட்டியாக களம் இறக்கினார் இயக்குனர். இந்த படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய சல்யூட். பிகில் திரைப்படத்திற்கு இணையாக காட்சிகள் மற்றும் திரையரங்குகள் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை என்பது மற்றுமொரு வருத்தமான விஷயம் இருப்பினும் ஒரு வலுவான போட்டியாக இந்த படம் நிற்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.அதுமட்டும் இல்லாமல் கார்த்திக் இந்த படத்தில் இன்னொரு பருத்தி வீரனாக இருக்கிறார் என்றும் ரசிகர்கள் படத்தை பார்த்து கூறினார்கள்.

Image result for kaithi"

பிளஸ்:

கைதி படத்தில் ஹீரோயின், பாடல், ரொமான்ஸ் இல்லை என்றாலும் படம் அட்டகாசமான திரில்லிங் படமாகவும், சூப்பர் ஹிட் படமாகவும் உள்ளது என ரசிகர்கள் கூறி உள்ளனர். மரண மாஸ் காட்டுகிறது கார்த்திக் கைதி படம்.

அதோடு கைதி படம் அப்பா– மகள் பாசத்தை மையமாக கொண்ட படம் என்றும் தெரிய வருகிறது.

மைனஸ்:

பிகில் போன்ற பிரமாண்டமான படத்திற்கு முன்னால் கைதி படம் குறித்து சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

ஹீரோயின் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

Advertisement