நடிகர் காஜா ஷெரிப்பின் தற்போதைய நிலை

0
10673

நடிகர் ஹாஜா ஷெரீப் இவரை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது காரணம் 1980களுக்கு மேல் திரையுலகில் வலம் வந்தவர் இவர்.

- Advertisement -

காமெடியால் கொடிகட்டி பறந்த காலகட்டம் அது. கே.பாக்யராஜ் நடித்து வெளியான படம் அந்த ஏழு நாட்கள், அதில் பாலகாட்டு மாதவன் கதாபாத்திரத்தில் பாடகராக நடித்திருந்தார் பாக்கியராஜ் . அதில் அவருக்கு சிஷ்யனாக ‘டோலாக்’ வாசிக்கும் பையனாக தோன்றியவர் தான் ஹாஜா ஷெரீப்.

‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் நடிகரும் இயக்குனருமான விசுவின் இரண்டாவது மகனாகவும் ரகுவரனின் தம்பியாகவும் நடித்திருப்பார்.

-விளம்பரம்-

12ஆம் வகுப்பு பாஸ் செய்வதே தனது நோக்கமாக அந்த வகுப்பிலேயே பலமுறை இருப்பார். இதை காமெடியாக நடித்திருப்பார். இயக்குனர் சிகரமான கே.பாலச்சந்தர் அவர்கள் இவரை பற்றி கூறும்போது, அடுத்த கமல்ஹாசன் இவர்தான் என கூறியிருப்பார்.

ஆனால் தற்போது இந்த ஹாஜா ஷெரீப் எந்த திரைப்படத்திலும் நடிப்பதில்லை . இப்போது அவர் மலேசிய, துபாய், கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதில் தமிழ் நடிகர், நடிகைகளை அங்கு அழைத்து சென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும், ஏற்பாட்டாளாராக பணியாற்றி வருகிறார்.

Advertisement