விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் மதியின் பெற்றோர்கள், இந்த வீட்டில் நீ அட்ஜஸ்ட் பண்ணி தான் வாழனும். எதிர்த்து பேசாதே. எங்களுடைய நிலைமையை யோசித்துப் பார் என்றெல்லாம் சொன்னார்கள். மதி, நீங்கள் என்னை மறந்து விடுங்கள். இங்கு யாரு கூப்பிட்டாலும் வராதீர்கள் என்று சொல்லி விட்டார். அதற்குப்பின் தங்கராஜ், இந்த பிரச்சனைக்குள் வந்துவிட்டார். அவர் மதியின் அப்பா-அம்மாவை அங்கிருந்து கிளம்ப சொன்னார். அதற்கு பின் மதியை தனியாக அழைத்து அறிவுரை எல்லாம் சொன்னார். ஆனால், மதி அதை பற்றி பெரிதாகவே கண்டு கொள்ளவில்லை.

பின் தங்கராஜ், தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அங்கிருந்து சென்றார். சுரேஷ், எது வேணாலும் நடந்திருக்கட்டும். நீ என்னுடைய அப்பா, அம்மாவிடம் மன்னிப்பு கேளு என்றார். மதி, நான் எந்த தவறும் செய்யவில்லை. யாரிடமும் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். பாக்யராஜ், மலர் எல்லோருமே மதியை மன்னிப்பு கேட்க சொன்னார்கள். ஆனால், மதி முடியாது என்றார். இதனால் கொந்தளித்த சுரேஷ், இனிமேல் நீ இந்த வீட்டில் இருக்க தேவையில்லை என்று மதியை பிடித்து வெளியே தள்ளுகிறார். மதியும் வீட்டிற்கு வெளியே சென்றார். வீட்டு திண்ணையில் தான் மதி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.
அழகே அழகு:
மதி தன்னுடைய சுயமரியாதைக்காக தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார். சுரேஷ், நீ எங்கேயாவது போ. என் வீட்டில் இருக்காதே. வேலையை முடித்து வரும்போது நீ இங்க இருக்க கூடாது. எங்கயாவது போய் தொலை. உன்னால்தான் என் வீட்டில் நிம்மதி இல்லை என்று ரொம்ப அவமரியாதையாக பேசி விட்டார். அதற்குப்பின் மதி தன்னை சுயமரியாதை இல்லாதவள் என்று பேசியதை நினைத்து மலர் வருத்தப்பட்டு கொண்டிருந்தார். பாக்கியராஜ் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் மலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மதி வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து இருப்பதால் லட்சுமி கொதிக்கிறார். அவளை வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதைப்பற்றி மாமனார், தங்கராஜ்க்கு போன் செய்து சொல்கிறார். கோபப்பட்ட தங்கராஜ், மதியின் அப்பா, அம்மாவிற்கு ஃபோன் செய்து சுரேஷ் வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்கிறார். அதோடு மதியை அங்கிருந்து வீட்டிற்கு அழைத்து வர சொல்கிறார். மதியின் அப்பாவுமே அங்கிருந்து கிளம்புகிறார். இன்னொரு பக்கம் வீட்டிற்கு வந்த சுரேஷ், மதி வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பதை பார்த்து கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
அவளை வீட்டை விட்டு துரத்துங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாக்யராஜ், மலர் இருவரும் எவ்வளவோ எடுத்து சொல்லி புரிய வைக்கிறார்கள். ஆனால், வீட்டில் யாருமே கேட்கவில்லை. மதியின் அப்பா வந்தவுடன் வீடு ருத்ரதாண்டவம் ஆடுகிறது. லட்சுமி பேசிய பேச்சைக் கேட்டு மதி அப்பா ரொம்பவே மனமடைந்து விடுகிறார். பின் தன் மகளை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார். அங்கிருந்து மதி கிளம்பியதால் லட்சுமி ரொம்பவே சந்தோசப்படுகிறார். பின் மதி, சுரேஷ் பேசிய வார்த்தைகள் எல்லாம் நினைத்து பார்த்து வேதனைப்படுகிறார்.






