திருமணம் மற்றும் குழந்தைக்கு பிறகு காஜலின் சினிமா வாழ்க்கை – அவரே அளித்த விளக்கம்

0
713
kajal
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக காஜல் அகர்வால் அறிமுகமானார். பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் தமிழில் இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். ‘கோமாளி’, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இதனிடையே சோசியல் மீடியாவில் காஜல் அகர்வால் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்றும், அவர் வேறு ஒரு நபருடன் நெருங்கிய உறவில் இருக்கிறார் என்றும், விடுமுறை நாட்களில் தன் நண்பர்களுடன் ஊர் பயணங்கள் செல்கிறார் என்றும் பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன.

- Advertisement -

காஜல்- கௌதம் கிச்சலு திருமணம்:

இப்படி ஒரு நிலையில் காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்டகாலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் காஜல் தன் கணவருடன் அடிக்கடி சுற்றுல்லா சென்று இருந்தார். அங்கு எடுக்கும் புகைப்படங்கள் எல்லாத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.

காஜல் கர்ப்பமாக இருக்கும் செய்தி:

திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார். இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார். மேலும், தற்போது காஜல் கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதற்கான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. திருமணத்திற்கு பின் காஜலுக்கு பட வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் சில மொழி படங்களில் கமிட்டாகி நடித்து இருந்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் காரணத்தினால் அவர் படங்களில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் காஜல் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

காஜல் அளித்து உள்ள பேட்டி:

அதில் அவர் திருமண வாழ்க்கையால் சினிமா வாழ்க்கை பாதித்ததா? என்று கேட்டதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, திருமணம் எனது சினிமா வாழ்க்கையில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. திருமணமான பிறகு நடிகைகள் சினிமாவுக்கு குட்பை சொல்லும் காலம் தற்போது மாறிவிட்டது. நடிகைகளின் சொந்த வாழ்க்கை முடிவுகள் சினிமாவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ரசிகர்கள் புரிந்து உள்ளனர். எனவே சொந்த வாழ்க்கை மாற்றங்கள் பற்றி யோசிக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தலாம். பாலிவுட் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சினிமா துறைகள் மாறிவிட்டன. வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் நாம் தொடர்ந்து நம் வேலையை செய்யலாம்.

திருமணத்தால் சினிமா பாதித்தா குறித்து காஜல் விளக்கம்:

திருமணத்திற்கு முன்பிருந்தே நான் எனக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்ந்து எடுத்து வருகிறேன். அதிலும் சமீபகாலமாக எனக்கான கதாபாத்திரங்களை நான் கவனமாக தேர்வு செய்து வருகிறேன். திருமணம் அதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. திருமணத்துக்கு பிறகு கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காஜல் குழந்தை பிறந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்பது தெரியவருகிறது. இப்படி காஜல் கூறியிருக்கிற பதில் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருப்பதோடு மட்டுமில்லாமல் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.

Advertisement