பட வாய்ப்புகளை பிடிக்க காஜல் அகர்வால் விரிக்கும் ஆப்பர்.! தயாரிப்பாளர்கள் குஷி.!

0
640
Kajal-Agarwal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

-விளம்பரம்-
’பிஎம் நரேந்திர மோடி’ படத்தைக் காண ஆசை - காஜல் அகர்வால்

தற்போது முதன் முறையாக கமலுடன் ‘இந்தியன் 2’ படத்திலும் கமிட் ஆகியுள்ளார். ஆனால், அம்மணிக்கு மற்ற பட வாய்ப்புகள் வலம் வந்த வண்ணம் இல்லை. இதனால் தற்போது பட வாய்ப்புகளை பிடிக்க தயாரிப்பாளர்களுக்கு புது விதமான சலுகைகளை அளித்து வருகிறார் அம்மணி.

- Advertisement -

ஒண்ணு வாங்கனா ஒண்ணு இலவசம்னு சீசன் காலத்துல ஆஃபர் கிடைப்பதுபோல் நடிகை காஜல் அகர்வாலும் சீசன் ஆஃபர்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். கைவசம் அவருக்கு படங்கள் குறைந்த நிலையில் புத்திசாலித்தனமாக இந்த முடிவை எடுத்தி ருக்கிறாராம். காஜல் 2 கோடி சம்பளம் கேட்கிறார்.

அவரை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் சம்பளத்தில் தள்ளுபடி கொடுங்கள் என்று கேட்டால் அவர்களுக்கு ஒரு ஆஃபர் தருகிறார். அதாவது ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம்போடும் அதே சமயத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க சேர்த்து ஒப்பந்தம் போடணும். ஒரே நேரத்தில் ரெண்டு படம் ஒப்பந்தம் போட்டால் சம்பள தள்ளுபடி நிச்சயம் என்கிறாராம்.

-விளம்பரம்-
Advertisement