புத்தாண்டில் காஜல் கர்ப்பமாக இருப்பதை சூசகமாக தெரிவித்த அவரின் கணவர் – வைரலாகும் புகைப்படம் இதோ.

0
342
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை மிகவும் சூசகமாக தெரிவித்து இருக்கிறார் அவரது கணவர். தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதற்கு பிறகு இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து கொண்டு வருகிறார்.இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி கவுதம் கிச்லு என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் திருமணம் 4, 5 நாட்கள் கொண்டாட்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகிறார் காஜல். தற்போது காஜல் அகர்வால் கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் பாருங்க : பிரியங்காவிடம் உதவியே கேட்கவில்லை என்று சொன்ன பாவனி – குறும்படம் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

கர்ப்பமாக இருக்கும் காஜல் :

சமீப காலமாக காஜல் அகர்வால் பதிவிடும் புகைப்படங்களில் அவரது வயறு கொஞ்சம் பெரிதாக இருப்பதை கண்டு ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு வந்தனர். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர் இருவரும் அதனை மிகவும் சூசகமாக உறுதி செய்து இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

கணவரின் சுசுக பதிவு :

அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார். அதே போல காஜல் அகர்வாலும் தன் கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘புதிய தொடக்கம்’ என்று குறிப்பிட்டுள்ளார். அதிலும் அந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் கணவர் காஜலின் வயிற்றை பிடித்தபடி இருக்கிறார். இதை எல்லாம் பார்த்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை நெட்டிசன்கள் உறுதி செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனன்ர்.

-விளம்பரம்-

காஜல் அகர்வால் தங்கை நிஷா :

காஜல் அகர்வாலுக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவரும் ஒரு நடிகை தான். இவர் தமிழில் விமல் நடிப்பில் வெளியான இஷ்டம் படத்தில் நடித்து இருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் ஒரு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு நிஷா அகர்வால் காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

தங்கையின் ஆசை :

அதில் பேசிய அவர், சில சுயநலமான காரணங்களால் அவர் சீக்கிரமே குழந்தை பெற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு திருமணம் ஆன நாளில் இருந்தே நான் இதை தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் காட்டினால் என்னுடைய மகனுக்கு துணை கிடைக்காது. அவனுக்கு இப்போதே 3 வயது ஆகிறது. அதனால் சீக்கிரம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement