பிரியங்காவிடம் உதவியே கேட்கவில்லை என்று சொன்ன பாவனி – குறும்படம் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
439
pavni
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி 91 நாட்களை கடந்து மிகவும் பரபரப்பாக என்று கொண்டு இருக்கிறது. இதுவரை 12 பேர் வெளியேறி இருக்கும் நிலையில் பிரியங்கா, தாமரை செல்வி, ராஜு, பாவனி, சஞ்சீவ், சிபி, அமீர், நிரூப் என்று 8 பேர் மட்டும் இருக்கின்றனர். இதில் இந்த வாரம் அனைவரும் நாமினேட் ஆகி இருக்கும் நிலையில் பிக் பாஸில் மிகவும் எதிர்பார்கப்படும் Ticket To Finale டாஸ்க் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டாஸ்கில் முதல் நாளே நிரூப் வெளியேறி இருந்தது பலருக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

-விளம்பரம்-

மொக்கையாக சென்ற டாஸ்க் :

நிரூப் வெளியேறியதை தொடர்ந்து இரண்டாம் டாஸ்க்கிலேயே பாவனியும் தாமரையும் வெளியேறினார். இவரை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்கில் ராஜு, பிரியங்கா, சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய 5 பேர் மட்டும் இந்த டிக்கெட் டு பினாலே டாஸ்கை விளையாடினர். இதில் பிரியங்கா மற்றும் ராஜு வெளியேற்றப்பட்டனர். பின் அடுத்து சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூன்று பேர் மட்டும் விளையாடினர்.

- Advertisement -

பைனல் சென்ற அமீர் :

இறுதியும் அமீர், சிபி மட்டும் இறுதி டாஸ்கில் விளையாட கடைசியில் அமீர் வெற்றி பெற்று ticket to finaleவை வென்று நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். பொதுவாக Ticket To Finale டாஸ்க் என்றால் கடுமையான போட்டிகள் தான் இருக்கும் ஆனால், இந்த முறை பல டாஸ்க்கில் வெறும் வாயை பயன்படுத்தி விளையாடும் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டது.

Physical Task எங்கே :

இருப்பினும் கயிறு டாஸ்க், முட்டை டாஸ்க் என்று Physical டாஸ்க் கொடுக்கப்பட்டும் அதிலும் போட்டியாளர்கள் தங்கள் வாய் சாமர்த்தியத்தை பயன்படுத்தியே விளையாடினர். இருப்பினும் முட்டை டாஸ்க் கொஞ்சம் சுவாரசியமாக சென்றது. அதிலும் இந்த டாஸ்க்கில் பிரியங்காவும் தாமரையும் குழாய் அடி சண்டையை போட்டு இருந்தனர்.

-விளம்பரம்-

தனித்து விளையாடிய தாமரை – பாவனி :

இந்த டாஸ்கில் தாமரை மற்றும் பாவனி இருவர் மட்டும் தான் யாரையுடைய உதவியும் இல்லாமல் விளையாடினர். மற்ற 4 பெரும் கூட்டணி அமைத்து மிகவும் Safe கேமை தான் விளையாடினர். இப்படி ஒரு நிலையில் நேற்றய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் கேட்டார். அப்போது பிரியங்கா பாவனி பக்கத்தில் நான் இருந்து இருந்தால் நான் அவளுக்காக விளையாடி இருப்பேன் என்று கூறி இருந்தார்.

பாவனி குறும்படம் :

அப்போது பாவனி ‘நான் உன்னிடம் உதவி கேட்கவே இல்லையே. நாம் ரெண்டு பேரும் பேசும் போது கூட நீ தனியா விளையாடு நான் தனியா விளையாடுறேன் என்று தான் சொன்னேன் ‘ என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே பாவனி கடந்த சில நாட்களுக்கு முன் பிரியாங்காவிடம் பேசும் போது ‘Physical டாஸ்க் வந்தால் நாம் சேர்ந்து விளையாடுவோம் ‘ என்று கூறிய குறும்படம் ஒன்றை நெட்டிசன்கள் போட்டு பாவனியை வச்சி செய்து வருகின்றனர்.

Advertisement