சமீபத்தில் பிறந்த மகன் குறித்து முதன் முறையாக அறிவித்த காஜல் – குழந்தையின் கியூட் புகைப்படம் இதோ.

0
634
kajal
- Advertisement -

சமீபத்தில் பிறந்த தங்கள் குழந்தையின் பெயரை அறிவித்து இருக்கிறார் காஜல் கணவர் கெளதம். தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாகவும், முன்னணி நடிகையாகவும் இருந்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 ஆம் ஆண்டு ‘ஹோ கயா நா’ என்ற ஹிந்தி படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். அதன் பின் 2007 ஆம் ஆண்டு லட்சுமி கல்யாணம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா சினிமா பக்கம் காஜல் வந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-401-945x1024.jpg

பின் இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.மேலும், இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து உள்ளார். ‘கோமாளி’, மெர்சல் ஆகிய படங்களில் காஜல் அகர்வால் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

- Advertisement -

காஜலின் திருமணம் :

காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை நீண்ட காலமாக காதலித்து வந்ததை அறிவித்தார். பின் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுடைய திருமணம் கொரோனா லாக் டவுனில் இருந்ததால் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அதோடு திருமணத்திற்கு பின்னும் காஜல் படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.இறுதியாக வெங்கட் பிரபு இயக்கிய ‘லைவ் டெலிகாஸ்ட்’ என்ற வெப் தொடரில் காஜல் நடித்தார்.

கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்த காஜல் :

இப்படி ஒரு நிலையில் 2022 புத்தாண்டை வரவேற்கும் விதமாக காஜல் அகர்வாலின் கணவர் காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் 2022 ஆம் ஆண்டை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் காஜல் அகர்வாலின் கணவர் கர்ப்பமாக இருக்கும் ஒரு எமோஜி ஒன்றையும் பதிவிட்டுருந்தார். சமீப காலமாக அடிக்கடி போட்டோ ஷூட்களை பதிவிட்டு வந்தார் காஜல்.

-விளம்பரம்-

சமீபத்தில் பிறந்த மகன் :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கர்ப காலம் குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் காஜல் அகர்வாலுக்கு நேற்று (ஏப்ரல் 19 ஆம் தேதி )ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் காஜலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மகனின் பெயரை அறிவித்த கணவர் :

குழந்தை பிறந்த நிலையில் காஜல் மற்றும் அவரது கணவர் இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக இதுகுறித்து அறிவித்து இருக்கிறார் காஜல் கணவர் கெளதம் கிச்லு ‘தங்கள் மகன் 19 ஆம் தேதி பிறந்தார் என்றும் அவருக்கு ‘நீல் கிச்சலு’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், கிச்லு என்பது காஜல் கணவரின் வம்சா வழி பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement