தனுஷின் பொல்லாதவன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகை தான்.

0
65750
polladavan
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டு வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழ் சினிமா உலகிற்கு ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் நடிகர் தனுஷ் அவர்கள் “காதல் கொண்டேன், திருடா திருடி, பொல்லாதவன்,ஆடுகளம், விஐபி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் திரையரங்கிற்கு வெளி வந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ‘அசுரன்’ படம். இந்த படம் அசுர வேட்டை ஆடியது என்று கூட சொல்லலாம். ஏன்னா,அந்த அளவுக்கு அசுரன் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,பாராட்டையும் பெற்றது. இப்படி இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for thanush pollathavan movie stils"

இந்நிலையில் தனுஷ் அவர்கள் 2007 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சமூக வலைத்தளங்களில் பொல்லாதவன் படம் குறித்து பல கருத்துக்கள் வருகின்றன. மேலும், இந்த ‘பொல்லாதவன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்ய இருந்தார் என்ற தகவல் இணையங்களில் வெளியானது. அதுமட்டும் இல்லாமல் ‘பொல்லாதவன்’ படத்தின் சூட் போது நடிகை காஜல் அகர்வாலும்,நடிகர் தனுஷும் இருந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றது.

இதையும் பாருங்க : தெலுங்கு படத்தில் அங்கம் தெறிக்கும் வகையில் குத்தாட்டம் போட்ட மிர்னாலினி. வீடியோ இதோ.

- Advertisement -

மேலும்,வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் பொல்லாதவன். இந்த படம் முழுக்க முழுக்க பைக் திருடு போன கதையை மையமாகக் கொண்டதாகவும் இத்தாலி திரைப்படத்தின் தழுவல் படம் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ஜி.வி பிரகாஷ் குமார் அவர்கள் இசை அமைத்து உள்ளார். மேலும்,இந்த படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி, சந்தானம், கருணாஸ், முரளி கிஷோர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது பொல்லாதவன் படத்தில் நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு பதிலாக பிரபல நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இதற்கான போட்டோ ஷூட்களில் கூட நடிகை காஜல் அகரால் பங்குபெற்றுள்ளார். மேலும்,என்ன காரணத்தினால் அவர் நடிக்கவில்லை என்று தெரியவில்லை.

Image result for thanush pollathavan movie stils"
Image result for thanush pollathavan movie stils"

மேலும், ரசிகர்கள் காஜல் அகர்வால் பொல்லாதவன் படத்தில் நடித்தார் என்பதை அதிகமாக ஷேர் செய்தும் வருகின்றனர். நடிகை காஜல் அகர்வால் அவர்கள் முன்னணி நடிகைகளில் பிரபலமான நடிகை ஆவார். மேலும்,இவர் 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையில் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன் அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவு பிரபலமாகவில்லை. மேலும்,2009 ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண் நடிப்பில் வந்த மகதீரா படம் தான் மிகப் பெரிய சாதனைப் படமாக அமைந்தது. அதற்கு பிறகு அவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் 2007 ஆம் ஆண்டு பொல்லாதவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement