கஜோலின் மகள் இப்படி வளர்ந்துட்டாங்களே.! சினிமாவில் வேறு நடிக்கபோகிறார்களா ?

0
427
kajol

இந்தி நடிகை கஜோல் பல ஆண்டுகளாக பாலிவுட் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் ஒரு நடிகை. இந்தி நடிகையயக இருந்தாலும் மற்ற மொழி ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தார். தமிழில் “மின்சாரக்கனவு ” படத்தில் நடித்த கஜோல் பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடித்த “விஐபி 2” படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தினார்.

இன்றளயும் இந்தி படங்களில் நடித்து வரும் கஜோல் தற்போது ஷாரு கான் நடித்து வரும் “ஜீரோ” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். 1999 ஆம் ஆண்டு நடிகர் அஜய் தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது.


இந்திய திரையுலகின் நட்சத்திர ஜோடி நடிகை கஜோல், அஜய் தேவ்கனுக்கு 15 வயதில் நைசா தேவ்கன் என்ற மகளும், 8 வயதில் யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளமை தெரிந்ததுவே. சமீபத்தில் குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா அவர்கள், கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை கஜோல் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.


இந்த நிலையில் தற்போது நைசா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் என மீடியாக்கலீல் தகவல் பரவிவருகிறது. அதற்கு பதில் அளித்துள்ள கஜோல், 
நைசாவுக்கு 16 வயது தான் ஆகிறது. அவரை மீடியா சில காலம் தனியாக விடுங்கள். அவள் இப்போது தான் 10 ஆம் வகுப்பு படிக்கிறார் என்று கூறியுள்ளார் கஜோல்.