எப்படி இருக்கிறது உதயநிதியின் ‘கலகதலைவன்’ – முழு விமர்சனம் இதோ.

0
1090
udhay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் நெஞ்சுக்கு நீதி படத்தை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கலகத் தலைவன். இந்த படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். பிசாசு படத்தின் இசை அமைப்பாளர் அரோல் கரோலி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தில்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. பல எதிர்பார்ப்புகளுடன் இன்று வெளியாகியிருக்கும் கலகத் தலைவன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் ட்ருபேடார் எனும் கார்பெட் நிறுவனம் புது வாகனம் ஒன்றை கண்டுபிடிக்கிறது. அவர்கள் கண்டுபிடித்த வாகனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தருவது ஆகும். இதை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறார்கள். ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்றை மாசு செய்யும் என்று கண்டுபிடிக்கின்றனர். இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாது என்று ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகிறார். ஆனால், எப்படியோ இந்த விஷயம் எதிரி நிறுவனத்திடம் தெரிந்து விடுகிறது.

- Advertisement -

இதனால் ட்ருபேடார் அறிமுகம் செய்த இந்த வாகனத்தின் மேல் பல விமர்சனங்களும், பிரச்சனைகளும் எழுதுகிறது. இதனால் ட்ருபேடார் நிறுவனத்தின் ஷேரும் பங்குச் சந்தையில் குறைய துவங்குகிறது. ஏற்கனவே நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கும் ட்ருபேடார் நிறுவனத்திற்கு மேலும் மேலும் அடி விழுகிறது. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் காரணம் யார்? இந்த விஷயத்தை எதிரிகளிடம் சொன்னது யார்? என்று விசாரிக்க ட்ருபேடார் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் ஆரவ் நியமிக்கப்படுகிறார்.

இவர் மிகவும் கொடூரமான முறையில் இதை விசாரித்து வருகிறார். இறுதியில் இந்த அனைத்து கலகத்திற்கும் காரணம் யார்? இந்த ரகசியங்களை சொன்ன அந்த மர்ம நபர் யார்? அவர் என்ன செய்கிறார்? ஏன் செய்தார்? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தினுடைய மீதி கதை. வழக்கம்போல் தன்னுடைய நடிப்பை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படுத்தி இருக்கிறார். வில்லனாக வரும் ஆரவ் அனைவரையுமே மிஞ்சும் அளவிற்கு நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

ஒவ்வொருவரையும் தேடி கொடூரமாக கொல்லும் ஆரவின் நடிப்பு படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. இவரை அடுத்து கதாநாயகியாக வரும் நிதி அகர்வால் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால், இவர் எதுக்கு வருகிறார் என்று தான் தெரியவில்லை. மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றிய கலையரசனின் நடிப்பு ஓகே என்று சொல்லலாம். இயக்குனர் எடுத்துக் கொண்ட கதைக்களம் அருமையாக இருக்கிறது. அதிலும், கதாபாத்திரங்களின் வடிவமைப்பு, சிறு சிறு விஷயத்தைக்கூட அழகாக காட்டி இருப்பது ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறது.

மேலும், இடைவெளி காட்சியில் மாஸ் காட்டிருக்கிறார். ஆனால், தடம் என்ற மாபெரும் வெற்றிக்கு பின் மகிழ்திருமேனி இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம்தான். படத்தில் விறுவிறுப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் சுவாரசியத்தை அதிகரித்து இருந்தால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்திருக்கும். படத்தின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது. ஆனால், பாடல்கள் தான் பெரிதாக ரசிகர்களை தவறவில்லை. பல எதிர்பார்ப்புகளுடன் வெளியான கலகத் தலைவன் படம் ஒரு சுமாரான படம் என்று சொல்லலாம்.

நிறை:

உதயநிதி ஸ்டாலின், ஆரவ் உடைய நடிப்பு பிரமாதமாக இருக்கிறது.

மகிழ்திருமேனி எடுத்துக் கொண்ட கதைகளம் சிறப்பு.

இடைவெளி காட்சி அருமையாக இருக்கிறது.

குறை:

படத்தில் விறுவிறுப்பு சற்று குறைவாக இருக்கிறது.

பாடல்கள் பெரிதாக ரசிகர்களை ஈர்க்கவில்லை.

திரைக்கதையில் சுவாரசியத்தை அதிகரித்து இருக்கலாம்.

தடம் போன்ற பெரிய வெற்றிக்கு பிறகு மகிழ்திருமேனியின் இந்த படம் பெரியளவு பேசப்படவில்லை.

மொத்தத்தில் கலகத் தலைவன் – ஏமாற்றம்

Advertisement