உளவுத்துறை அறிக்கை.! கலைஞருக்கு Z+ பாதுகாப்பு.! ஜெயலலிதாவுக்கு பிறகு கலைஞருக்கு தான்

0
1254
kalaingar
- Advertisement -

திமுக தலைவர் கலைஞர் கருணாநதி கடந்த (ஆகஸ்ட் 7) ஆம் தேதி காலமானார். கலைஞர் அவர்கள் இதுவரை 5 முறை தமிழக முதல்வராகஇருந்துள்ளார். ஆனால், அவர் முதலமைச்சராக இல்லாத போதும் அவர் எப்போது வெளியே சென்றாலும் அவரை சுற்றி துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் இருந்துள்ளதை நீங்கள் கண்டிருக்கலாம்.

-விளம்பரம்-

kalainjar

- Advertisement -

அவருக்கு வழங்கபட்டிருந்த பாதுகாப்பின் பெயர் Z+ பாதுகாப்பு என்பது நம்மில் சிலருக்கு தெரிந்திருந்தலும். இந்த Z+ பாதுகாப்பு குறித்த சிறப்பு அம்சம் நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இதனை பற்றிய ஒரு மேலோட்டதை இந்த பதிவில் காணலாம்.

நமது இந்திய நாட்டில் உள்ள வி ஐ பி மற்றும் வி வி ஐ பி-களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் பாதுகாப்பை X,Y,Z,Z+ என்று நான்கு விதமாக பிரிக்கலாம். இதில் Z+ என்பது தான் துப்பாக்கி ஏந்திய அதிக பாதுகாவலர்களை கொண்ட உயர்ரக பாதுகாப்பாக கருதப்படுகிறது.

-விளம்பரம்-

NSG_Commandos

இந்தியாவில் சுமார் 24 வி வி ஐ பி-களுக்கு இந்த Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்துறை அமைச்சகம்தான் வி ஐ பி-களுக்கு எந்த அளவிற்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை அறிந்த பின்னரே எந்த வகையான பாதுகாப்பு வழங்கலாம் என்பதை முடிவெடுக்கும். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உளவுதுறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு வி வி ஐ பி களுக்கு இருக்கும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையை வெளியிடும்.

அந்த அறிக்கையை பொறுத்தே ஒரு வி வி ஐ பி-க்கு பாதுகாப்பை கூட்டலாமா இல்லை குறைக்கலாம் என்பதை உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கும். அந்த வகையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு கலைஞர் அவர்களுக்குத்தான் இந்த இந்த Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கலைஞர் அவ்ரகளுக்கு அளிக்கப்பட்டிருந்த Z+ பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘கருணாநிதிக்கு அளிக்கப்பட்டிருந்த Z+ பாதுகாப்பை நாங்கள் திரும்பபெருகிறோம். இதுகுறித்து அதிகாரபூர்வமாக எங்களிடம் இருந்து எந்த அறிக்கையும் இருக்காது. கலைஞர் அவர்கள் இறந்த காரணத்தினால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த Z+ பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டுள்ளது ‘ என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

Advertisement