விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு சீசன் உதவி இயக்குனராக சின்ன திரையில் அறிமுகமானவர் பழனி பட்டாளம். அதற்கு பிறகு இவர் நிறைய காமெடி நிகழ்ச்சி போட்டியில் கலந்து கொண்டார். இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமில்லாமல் பல குரல் பேசும் மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் ஆவார். இவர் கொஞ்ச நடிகர்கள் வாய்ஸ் பேசினாலும் பக்காவாக பாடி லாங்குவேஜ்ஜோட பேசுபவர். மன்சூர் அலிகான், டிஆர், கோட்டா ஸ்ரீனிவாசராவ், விடிவி கணேஷ் போன்ற பல நடிகர்களின் குரல் பேசுவார். மேலும், பழனி பட்டாளம் ரியல் எஸ்டேட் பிசினஸில் பிஸியாக இருந்ததால் தொடர்ந்து காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியவில்லை.
இவருடைய ஸ்பெஷலே நீயா நானா கோபிநாத் மாதிரி பண்ண எபிசோடு தான். அது வேற லெவல்ல தூள் கிளப்பியது. இவர் சின்னத்திரையில் மட்டுமில்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் தற்போது இவர் வரைந்த ஓவியத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிறுவயதிலிருந்தே பழனி பட்டாளத்திற்கு படிப்பைவிட கலையின் மீது தான் அதிகம் ஆர்வம் கொண்டவர். சிறுவயதில் எல்லாரும் விளையாடிக் கொண்டிருந்தால் பழனி மட்டும் உட்கார்ந்து எதையாவது படம் வரைந்து கொண்டிருப்பார்.
இதையும் பாருங்க : உதவி இயக்குனராக இருந்த போது மிஸ்கின் இத்தனை படத்தில் நடித்துள்ளாரே- புகைப்படங்கள் இதோ.
பத்தாம் வகுப்பு முடிந்தவுடன் ஓவியம் வரைந்து கொடுப்பதற்கென்றே ஒரு தனி கடையை வைத்து இருந்தார். பின் டிஜிட்டல் ஆர்ட் வந்ததனால் இவருடைய கடை மூடப்பட்டது. அதற்குப் பிறகு தான் இவர் சின்ன சின்னதாக மேடைகளில் மிமிக்கிரி பண்ண ஆரம்பித்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். தற்போது இவர் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் இவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் சியான் விக்ரம் அவர்களின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சேது படத்தின் ஓவியத்தை வரைந்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை பழனி சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் பார்ப்பதற்கு அப்படியே தத்ரூபமாக உள்ளது. பலரும் இதை பார்த்து உண்மையாகவே பழனி படத்திற்கு இவ்வளவு திறமையா!! என்று ஆச்சரியத்தில் கேட்டு வருகிறார்கள்.