தி.மு.கவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணியா? – பிறந்த நாளில் கமல் சொன்ன சூசக பதில்.

0
140
Kamal
- Advertisement -

திமுகவுடன் கமலஹாசனின் கட்சி கூட்டணி வைப்பது குறித்த சர்ச்சைக்கு கமலஹாசன் கொடுத்திருக்கும் பதில் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். மேலும், கமல் அவர்கள் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

-விளம்பரம்-

அதன் பின் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கமல் பிரச்சாரம் செய்து இருந்தார். இதை தொடர்ந்து 142 சட்டமன்றத் தொகுதிகளில் கமல் வேட்பாளர்களை நிறுத்தினார். அதோடு திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று உறுதியளித்தார். பின் மநீம தேர்தலில் எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இருந்தாலும், விடாமுயற்சியுடன் கமல் மக்கள் நீதி மையம் கட்சியை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று கமலஹாசனின் 68 வது பிறந்த நாள்.

- Advertisement -

மு க ஸ்டாலின் வாழ்த்து பதிவு:

கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். இதற்கு பலரும் கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கமலஹாசனுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து எழுதுகிறார். அதில் அவர், கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி – மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! நலம் சூழ வாழிய பல்லாண்டு! என்று கூறி இருக்கிறார்.

கமல் அளித்த பேட்டி:

மேலும், கமல் தன்னுடைய பிறந்தநாளின் போது காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார். இதனை அடுத்து கமல் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார். அப்போது கமலிடம், அமைச்சர்களோடு பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பது திமுக கூட்டணிக்கு அட்சரமா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதற்கு கமலஹாசன், எங்களை இங்கு ஒன்று சேர்த்தது கட்சி அல்ல. நல்லெண்ணம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

திமுக கட்சியுடன் கூட்டணி குறித்து கமல்:

இப்படி கமலஹாசன் கொடுத்த பதிலின் மூலம் இவர் திமுக கட்சியுடன் கூட்டணி வைப்பது தெளிவாக தெரிகிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். கூடிய விரைவில் இவர்கள் இரு கட்சிகளும் இணையும் என்று அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த படம் விக்ரம். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்திருந்தது.

கமல் நடிக்கும் படம்:

இதனை அடுத்து கமலின் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இந்தபடம் விரைவில் வெளியாக உள்ளது. இதை அடுத்து தற்போது கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் KH234 படம் உருவாக்குகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. மேலும், இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

Advertisement