Home பொழுதுபோக்கு சமீபத்திய

மீண்டும் தான் ஒரு தீர்கதரிசி என்று நிரூபித்த கமல் – அன்று பாராட்டிய படத்திற்கு இன்று 4 ஆஸ்கர்.

0
285
kamal
-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். நடிகர் கமலஹாசன் அவர்கள் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து உள்ளார். சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் நடிகர் கமலஹாசன். இவர் சினிமா துறையில் நுழைந்து 60 ஆண்டுகள் ஆகியது. இவர் சினிமா துறையில் பல சாதனைகளை புரிந்தவர்.

-விளம்பரம்-

எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு அதை போலவே செய்வதும், சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகள் என எதுவுமே இருந்தாலும் டூப் போடமால் நடிப்பார். கமலஹாசன் அவர்கள் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். இவருடைய நடிப்பு திறமைக்காக இவர் வாங்காத விருதுகளே இல்லை. இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

விக்ரம் இசை வெளியிட்டு விழாவில் :

இப்படி இந்திய சினிமாவே வியக்கும் ஒரு கலைஞன் கடந்த ஆண்டு வெளியான “All Quiet On The Western Front” என்ற ஜெர்மானிய படம் குறித்து மிகவும் பெருமையாக பேசியிருந்தார். கடந்த ஆண்டு இயக்குனர் லோகேஷ் காணாராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசிய கமலஹாசன் “All Quiet On The Western Front” படத்தை பார்த்து இது போன்ற இரு படத்தை தன்னால் எடுக்க முடியவில்லை என்று வருந்தினார்.

அன்றே கணித்தார் கமல் :

-விளம்பரம்-

அவர் பேசியபோது 18 வயது இருக்கும் இளைஞர்கள் நாம் வியக்கும் அளவிற்கு மிகவும் அருமையாக நடித்திருக்கின்றனர். என்னுடைய இத்தனை கால சினிமா வாழ்க்கையில் நான் ஏன் இன்னும் இப்படி படம் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்தது என கூறினார். இந்நிலையில் அன்றே கணித்தார் கமல்ஹாசன் என்பதனை போல தற்போது இந்த “All Quiet On The Western Front” படத்திற்கு 4 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன.

-விளம்பரம்-

இந்த படம் சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த சர்வதேச திரைப்படம், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் என நான்கு பிரிவுகளில் இந்த படம் ஆஸ்கர் விருதுகளை வாங்கி குவித்துள்ளது. கடந்த 1929ஆம் ஆண்டு எரிக் மரியா ரீமார்க் என்ற ஜெர்மானிய எழுத்தாளர் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படமானது அந்த கால கட்டத்தில் இருந்த போர், சேறு படிந்த முகங்கள், வாகனங்கள், பல விதமான தாக்குதல்கள், அதனால் ஏற்படும் விளைவுகள், உயிரிழப்புகள், நண்பர்கள், உறவினர்கள் போன்றவற்றை கொண்டு தத்ரூபமான கதை, ஒளிப்பதிவு, பின்னணி இசை, சிறந்த நடிப்பின் வெளிப்பாடுதான் இந்த படத்திற்கு கிடைத்துள்ள 4 ஆஸ்கர் விருதுகள் எனக் கூறலாம்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news