‘தேவர் மகன் 2’ என்று கண்டிப்பாக இருக்காது..!செய்தியாளர்கள் சந்திப்பில் கமல் திடீர் ஷாக்..!

0
296
Devarmagan2

உலக நாயகன் கமல் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. அதோடு அந்த படம் வெளியான போது பல்வேறு ஜாதி பிரச்னைகளும் எழுந்தன.

Devarmagan

தற்போது கமல்ஹாசன் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன்2′ படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தேவர் மகன் 2 படத்தின் படப்பிடிப்புகளை விரைவில் துவங்க உள்ளதாக நடிகர் கமல் அறிவித்தவுடன் அதற்கு பல்வேறு எதிர்ப்புகளும் கிளம்ப துவங்கின.

தேவர் மகன் 2’ என்ற பெயரை தேவேந்திரர் மகனாக மாற்றுங்கள் அப்படி செய்யாவிட்டால் படம் ஓடாது; மாறாக அந்தப் படம் முடங்கும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கமல்ஹாசனுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கமலிடம் ‘தேவர் மகன்’ தான் கடைசி படமா என்று கேள்வி கேட்க்கப்பட்டது. அப்போது பேசிய கமல்,அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தேவர் மகன் படத்தின் தலைப்பு குறித்து கேள்வி கேட்டபோது,நான் ராஜ்கமலின் ஆறாவது படத்தை திருப்பி எடுக்கிறார் என்று சொன்னால் எப்படி புரியும். அதற்காக நான் தேவர் மகன் என்று தான் பெயர் வைக்கமுடியும். ஆனால், டைட்டில் நான் இன்னும் முடிவு செய்யவில்லை.கண்டிப்பாக அந்த பெயர் இருக்காது என்று கூறியுள்ளார் கமல்.