25 ஆண்டுக்கு முன்னும் 5 ஆண்டுக்கு முன்னும் எலிசபெத் ராணியை சந்தித்துள்ள உலக நாயகன் – அவரின் உருக்கமான நினைவுகள்.

0
368
kamal
- Advertisement -

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபத்துடனான சந்திப்புகள் குறித்து உலக நாயகன் கமலஹாசன் தனது நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார். இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் வயது 96. வயது முதுமை காரணமாக அவரது உடல்நிலை பாதிப்படைந்திருந்தது. மருத்துவர்களின் தீவிரமாக கண்காணிப்பில் இருந்த நிலையில் ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவிற்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் எலிசபத் ராணி கமலின் மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட்டை காண வந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இங்கிலாந்து ராணி 2-வது எலிசபெத்தின் வயது 96. வயது முதுமை காரணமாக அவரது உடல்நிலை பாதிப்படைந்திருந்தது. மருத்துவர்களின் தீவிரமாக கண்காணிப்பில் இருந்த நிலையில் ராணி எலிசபெத் நேற்று இரவு காலமானார் என பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரது மறைவிற்கு பல நாட்டு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் எலிசபத் ராணி கமலின் மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட்டை காண வந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

மருதநாயகம் ஷூட்டிங் ஸ்பாட் :

மூன்றாவது பயணமாக இந்தியா வந்த எலிசபெத் ராணி தமிழகத்திற்கும் விசிட் அடித்தார்.பின்னர் கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தின் செட்கள் இருந்த சென்னை எம்ஜிஆர் பிலிம் சிட்டிக்கு வருகை தந்து ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிவாஜி கணேசன் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். . இதன் காரணமாக அப்போதே இந்த படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது.

ராணியின் கடைசி இந்திய பயணம் :

இதுவே ராணி எலிசபெத் இந்தியா வந்த கடைசி பயணம் ஆகும். இங்கிலாந்து ராணிக்கு அந்த திரைப்படத்தின் ஒரு சண்டை காட்சியும் காட்டப்பட்டது. ராணிக்கு மட்டுமல்ல மருதநாயகம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்களும் அது மட்டும் தான். தற்போது எலிசபத் ராணியின் மறைவை தொடர்ந்து இந்த அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

கமலின் உருக்கமான பதிவு :

இப்படி ஒரு நிலையில் ராணி எலிசபெத்தை சந்தித்த சில தருணங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கலஹாசன். அதில் ராணி எலிசபெத்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில்

அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement