ரோபோசங்கருக்கு கமல் கொடுத்த அட்வைஸ் – எல்லாம் அந்த பழக்கம் தான் காரணம்.

0
1502
Roboshankar
- Advertisement -

ரோபோ சங்கருக்கு கமலஹாசன் அறிவுரை கூறியிருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் ரோபோ ஷங்கர். குறுகிய காலத்தில் தன்னுடைய நடிப்பாலும், நகைச்சுவை பேச்சின் மூலம் சினிமா உலகில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரோபோ சங்கர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரைக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-
roboshankar

முதலில் பாடி பில்டராக இருந்த இவர் மேடை காமெடியனாக அறிமுகமானர். அதன் பின்னர் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மேலும், டிவி நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக தான் இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த தீபாவளி என்ற படத்தின் மூலம் தான் சினிமா திரைக்கு அறிமுகமானார். ஆரம்பத்தில் சினிமா உலகில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ரோபோ ஷங்கர்.

- Advertisement -

ரோபோ சங்கர் திரைப்பயணம்:

அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடியனாக நடித்து இருக்கிறார். அதோடு இவருடைய மகளும் பிகில், விருமன் போன்ற படத்திலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் பார்த்திபன் நடிப்பில் வெளியாகியிருந்த இரவின் நிழல் படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Roboshankar

உடல் மெலிந்த ரோபோ:

இதனை தொடர்ந்து சரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் லெஜன்ட் படத்திலும் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களின் காமெடியனாக ரோபோ சங்கர் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நிலையில் தான் இவர் உடல் எடை குறைந்து பார்ப்பதற்கு மோசமாக இருந்தார். மேலும், இது தொடர்பாக ரோபோ சங்கர் அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார். அதில் அவர், முதலில் ஒரு படத்துக்காக உடல் எடையை குறைத்தேன்.

-விளம்பரம்-

ரோபோ சங்கர் நடித்த படம்:

அதற்கு பிறகு மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது. அதனால் தான் உடல் எடை அதிகமாக குறைந்தது என்று கூறியிருந்தார். தற்போது இவர் உடல் தேறி வருகிறார். மீண்டும் ரோபோ சங்கர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரோபோ சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பார்ட்னர். இந்த படத்தில் நடிகர் ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.

roboshankar

தொலைபேசியில் கமல் பேசியது:

இந்நிலையில் ரோபோ ஷங்கரின் உடல்நிலை குறித்து கமலஹாசன் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது, கமல் அவர்கள் ரோபோ சங்கரின் உடல்நிலை அறிந்து தொலைபேசியில், உங்களுடைய உடல் நலத்தை அதிக கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள். கட்டிங் எல்லாம் இனி வேண்டாம். ஜாக்கிரதையாக இருக்கணும் என்று அறிவுரை கூறி ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகளிடம் பேசி விசாரித்து இருக்கிறார். தற்போது இது தொடர்பான வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement