பாபாவை தொடர்ந்து 21 ஆண்டுக்கு முன் வெளியாகி தோல்வியடைந்த தன் படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யும் கமல்.

0
683
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தின் வெற்றிகரமான ரீரிலீஸுக்கு பிறகு பாபா பட இயக்குனரான சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான உலகநாயகன் கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படம் ரீரிலீஸ் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த 2001ஆம் ஆண்டு வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ். தாணு இந்த படத்தை தயாரித்திருந்தார்

-விளம்பரம்-

இப்படத்தில் மனிஷா கொய்ராலா, சரத்பாபு, ரவீனா டாண்டன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். மேலும் இப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியானது. ஆளவந்தான் திரைபடத்தின் கதை 1984 ஆம் ஆண்டு கமலஹாசனால் எழுதப்பட்ட ‘தாயம்’ இன்னும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட கதை ஆகும் பின்னர் அந்த கதையை கமல் திரைக்கதையாக மாற்றி இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் அதனை ஒப்படைத்து ஆளவந்தானை படமாக்க சொன்னார்

- Advertisement -

தேசிய விருதை பெற்ற ஆளவந்தான் :

இப்படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட் மக்களிடையே மிகவும் பேசப்பட்ட ஒன்று ஆஸ்திரேலிய கட்டிங் எட்ஜ் கிராபிக்ஸ் ஃபார்முலாவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஸ்பெஷல் எஃபெக்ட்க்காக தேசிய விருதையும் பெற்று கலக்கியது கமல் இந்த படத்தில் மேஜர் விஜயகுமார் எனும் ரோலில் நடித்திருந்தார் இதற்காக என்டிஏ சென்று கிராஸ் கோர்ஸ் முடித்துள்ளார். கமல் சில ஆண்டுகள் பயிற்சி பெற்று செய்ய வேண்டிய இந்த பயிற்சியை மூன்றே மாதங்களில் முடித்திருக்கிறார்.

அதி நவீன தொழில் நுட்பம் :

இப்படத்துக்கு சங்கர் ,ஏஷான்,லாய் கூட்டணி இசை அமைத்திருந்தது .இந்த இசை கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் ஆளவந்தான் தான் இதே கூட்டணி தான் கமல் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் படத்துக்கும் இசையமைத்தது. கமலஹாசன் இரட்டை இடங்களில் நடித்த இத்த படத்தில் அதிநவீன டெக்னாலஜியாக கருதப்பட்ட மோஷன் கண்ட்ரோல் கேமரா பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் இந்த டெக்னாலஜி முதன் முறையாக பயன்படுத்தப்பட்ட படம் ஆளவந்தான் தான்.

-விளம்பரம்-

பாபா படத்தில் மாற்றம் செய்யப்பட்ட கிளைமாக்ஸ் :

அப்படிப்பட்ட நிலையில் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றியாடவில்லை. மேலும் இப்படத்தை இயக்கிய யக்குனரான சுரேஷ் கிருஷ்ணா தான் இதற்கு பிறகு வந்த ரஜினிகாந்த நடித்திருந்த பாபா படத்தையும் எடுத்திருந்தார். ஆனால் அப்படமும் முதல் நாளிலேயே தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு பாபா படம் கிளைமாஸ்க் காட்சியில் சில மாற்றங்ககளை செய்து வெளியிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆளவந்தான் ரீ ரிலீஸ் :

இப்படி பட்ட நிலையில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் ரீமேக் செய்து வெளியிட்ட உள்ளதாக அதிகார பூர்வ தகவல் வந்துள்ளது. ஏற்கனவே பாபா படம் கடந்த மாதம் வெளியாகி மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நிலை தற்போது கமலஹாசன் நடித்த ஆளவந்தான் திரைப்படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் கமல் ரசிகர்கள் மத்தியில் மகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement