கருணாநிதி உடல்நிலை குறித்து பேசிய கமல்..! ஏன் சந்திக்கவில்லை.! காரணம் இதோ

0
606
- Advertisement -

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் மூன்று நாட்களுக்கு முன்னர் உடல் நல குறைபாட்டால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பல்வேறு அரசியல் பிரபலங்களும் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர். தற்போது நடிகர் கமல் கலைஞரின் உடல் நலன் குறித்து பேட்டியளித்துள்ளார்.

-விளம்பரம்-
karunanithi
karunanithi

கலைஞர் அவர்கள் கடந்த மூன்று நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்றைய தினம் அவரது உடல் நிலை மோசமாக நிலையில் தற்போது அவர் நலமாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் இருக்கிறது.கலைஞர் அவர்களை பல்வேறு நடிகர்களும் நேரில் சென்று சந்தித்து நலன் விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கலைஞரை சந்தித்த பின்னர் அவர் நலமாக உள்ளார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் கமல் ‘கலைஞர் அவர்களை நேரில் சந்திக்க முடியவில்லை, அவர் குணமடைந்து விரைவில் உடல் நலன் தேறி வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

Karunanidhi

-விளம்பரம்-

எதிர்க்கட்சியாக இருந்தாலும் கலைஞர் அவ்ர்களை முதலமைச்சர் எடப்பாடி அவர்களும் அதிமுகவினரும் நேரில் சென்று நலன் விசாரித்தது சிறப்பான மாண்பு தான்.கலைஞர் அவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்புவார் என்ற நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையில் நான் வெளியூர் செல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement