68 வது பிறந்தநாள் கொண்டாட்டம், செம குத்தாட்டம் போட்ட கமல், அதுவும் யார்கூட பாருங்க – வைரலாகும் வீடியோ

0
449
kamalhaasan
- Advertisement -

பிறந்தநாள் பார்ட்டியில் மகளுடன் கமல் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக அவதாரம் எடுத்து இருக்கிறார். இவர் சினிமா திரை உலகில் தன்னுடைய கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர்.
இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலகளவில் இவருக்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இறுதியாக கமல் நடிப்பில் வெளியாகி இருந்த ‘விக்ரம்’ படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார்.

- Advertisement -

விக்ரம் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். மேலும், இந்த நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருந்ததால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருந்தார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருந்தது.

இந்தியன் 2 படம் :

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருந்தது. இந்த படம் வெளியாகி 450 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்ததாக அறிவித்திருந்தார்கள்.
இதனை எடுத்து கமல் அவர்கள் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் “இந்தியன் 2” படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

மேலும், ‘இந்தியன் 2′ படம் அதிகபட்ச செலவில் எடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பல பிரச்சனைகளுக்கு பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் சென்று கொண்டு இருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாக இருக்கிறது.

மகளுடன் கமல் போட்ட குத்தாட்டம்:

இந்த நிலையில் கமலின் பிறந்தநாள் பார்ட்டி வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, நேற்று கமல் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அதில் திரை உலகை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கமல் தன்னுடைய மகளுடன் சேர்ந்து செம்ம குத்தாட்டம் போட்டு இருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement