விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் டெலிகாஸ்ட் ஆகி வந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நான்கு சீசன்களை கடந்து தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி கடந்த மாதம் தான் கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், இந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கியிருக்கிறார். இந்நிலையில் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், கமலஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் வரும் வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கில் அவர் கலந்து கொள்வாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் கமலின் உடல்நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோவிட் சூழலில் தொடர்ந்து பேசுவது தொண்டைக்கு நல்லதல்ல என்று அறிவுரை கூறி இருக்கின்றனர்.
அதே போல விர்ச்சுவலில் நிகழ்ச்சியை ஒளிபரப்பினால் சில டெக்கனிகள் பிரச்சனைகள் எழலாம் என்பதால் இந்த முடிவை விடுத்து, தற்போது கமலுக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் பிக் பாஸ் தொகுப்பாளராக களமிறங்கி கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், கடந்த சனிக்கிழமை சிறிது நேரம் மட்டும் அகம் டிவி வழியே தோன்றினார் கமல்.
மேலும், தன் உடல் நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருகிறேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கமலின் இரண்டு மகள்களான சுருதி மட்டும் அக்ஷரா இருவரும் இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தனர். மேலும், சுருதி ஹாசன் தனது காதலர் மற்றும் தங்கையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்தார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள், அங்கே உங்க அப்பா கொரோனா வந்து மருத்துவமனையில் இருக்காரு. நீங்க இங்க Fun பன்னிட்டு இருக்கீங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். இருப்பினும் கமலின் நிலை எப்படி இருக்கிறது என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு ‘நன்றாக இருக்கிறார், குணமாகி வருகிறார்’ என்று கமன்ட் செய்துள்ளார்.