சினிமாவை விட்டு விலகுவதாக வந்த சர்ச்சைகளுக்கு கமல்ஹாசன் முற்றுப்புள்ளி வைத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக இருக்கிறார். அதோடு தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் கமலஹாசன்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியிருந்த விக்ரம் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் படைத்திருந்தது. இதனை அடுத்து கமலின் நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த படம் இந்தியன் 2. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி இருந்தார். 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர்- கமலஹாசன் கூட்டணியில் வெளிவந்த இந்தியன் 2 படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை.
கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணி:
இதனை அடுத்து தற்போது கமல் நடித்த படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் நாயகன் என்ற படம் வெளியாகி இருந்தது. இந்த படம் இன்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 36 வருடங்களுக்கு பிறகு இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கபட்டு வருகிறது. இந்த தக் லைஃப் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

கமல் குறித்த தகவல்:
இந்த படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரோடாக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, சமீப காலமாகவே கூடிய சீக்கிரத்திலேயே கமலஹாசன் நடிப்பில் இருந்து விலக இருக்கிறார், ஓய்வு பெறுகிறார் என்றெல்லாம் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், இது தொடர்பாக கமல் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் வெளியாகாமல் இருந்தது.
கமல் பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கமலஹாசன், நான் சினிமாவை விட்டு விலகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. நடிப்பு என்னுடைய உயிர் மூச்சு. என்னுடைய ஆர்வம். என்னுள் இருக்கும் கலைஞனுக்கு இன்னும் பல கதாபாத்திரங்கள் உயிர் கொடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு நிறைய இருக்கு. சினிமா என்பது பொழுதுபோக்கு கிடையாது. ஒரு சக்தி வாய்ந்த ஊடகம்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:
கதைகள் மூலம் சமூகத்தில் உள்ள குறைகளை சரி செய்யவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபட்டு வருகிறேன். இந்த பொறுப்பிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன்.என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அது அணையும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் சோசியல் மீடியாவில் கமலஹாசன் பற்றி பரவும் பதில்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.






