தம்பி அண்ணாமலைக்கு நன்றி – அமரன் படம் குறித்து நெகிழ்ச்சியில் கமல்ஹாசன் சொன்ன விஷயம்

0
176
- Advertisement -

அமரன் படம் குறித்து அண்ணாமலை சொன்ன கருத்திற்கு கமல்ஹாசன் போட்டு இருக்கும் பதில் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.

- Advertisement -

அமரன் படம்:

இந்தப் படத்தில் முகுந்த் வரதராஜன் ரோலில் சிவகார்த்திகேயனும், ஹிந்து ரோலில் முகுந்த் மனைவியாக சாய்பல்லவியும் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். படம் மட்டும் இல்லாமல் பாடல்களும் பட்டைய கிளப்புகிறது. தீபாவளிக்கு வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதோடு முதல்வர் ஸ்டாலினும் படத்தை பார்த்து படகுழுவினரை பாராட்டி இருந்தார்.

பிரபலங்கள் பாராட்டு:

பிரபலங்கள் பலரும் அமரன் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். அதோடு மிகப்பெரிய அளவில் அமரன் படம் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் அமரன் படம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, அமரன் படம் பார்த்தேன். இராணுவ வீரர்களின் நேர்மை, வீரம், தைரியம் உள்ளிட்ட பல அம்சங்களில் இந்தப் படம் முக்கியமான ஒன்றாக கருதுகிறேன். மக்களைக் காக்க ஒரு வீரர் தன்னை தியாகம் செய்யும்போது, ஒரு குடும்பத்தின் இழப்பு என்னவென்பது தெளிவாக எடுத்துக்கூறப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

அண்ணாமலை பதிவு:

மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு உத்வேகம் தரும் கதை. 2014-ம் ஆண்டு நான் காவல்துறைப் பொறுப்பில் இருந்தேன். அவர் நம் தேசத்துக்காக செய்த தியாகம், எங்களுக்கு எதோ ஒன்றை இழந்துவிட்டோம் என்ற உணர்வைத் தந்தது. அந்த நினைவுகள் எனக்கு அப்படியே இருக்கிறது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் சிறப்பான இயக்கம், நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலகில் மிக முக்கியமானப் படம். அசாதாரணமான நடிப்பில் சாய்பல்லவி, அழுத்தமான இசை, சிறப்பான ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக இருந்தது.

கமல்ஹாசன் பதிவு:

இந்தப் படத்தை தயாரித்த கமல்ஹாசனுக்கு நன்றி. இந்தப் படம் ராணுவ வீரர்களுக்கும், நாட்டுக்காக தங்களை இழந்தவர்களுக்கும் சிறந்த மரியாதையும், அஞ்சலியும் என்றே நினைக்கிறேன். இந்திய ராணுவம் வாழ்க. நீங்கள் தான் சிறந்தவர்கள் என்பதை பெருமையுடன் சொல்கிறோம் என்று கூறி இருந்தார். இதை அடுத்து இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன், தமிழக பா.ஜ.க தலைவர் தம்பி அண்ணாமலை அவர்கள் அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருந்தார். அவருக்கு என் நன்றி என்று கூறி இருக்கிறார்.

Advertisement