யோவ், என்ன நடிக்கவிட்டா இத்தனை கோடி சம்பாதிப்பேன், அதை வச்சி கடனை அடைப்பேன் – விக்ரம் வெற்றியால் தெம்பான கமல்.

0
344
vikram
- Advertisement -

விக்ரம் படத்தின் வசூல் குறித்து கமல் அளித்து இருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருந்த படம் விக்ரம்.

-விளம்பரம்-

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை நடித்து பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்ரம் திரைப்படம்:

மேலும், இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதிற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இதனால் கமல் அவர்கள் படக்குழுவினருக்கு பரிசு கொடுத்து இருந்தார். அதோடு இந்த படத்தில் கமலஹாசன் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் மற்றும் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த கைதி ஆகிய படங்களின் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த படம் மல்டிவெர்ஸ் படம் என்று கூறப்படுகிறது.

விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டிங்:

இந்நிலையில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட்டிங்கில் கமலஹாசன் பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, உங்கள் தெருவில் ஒருவன் பணக்காரன் ஆனால் போதாது. எல்லோருமே சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்களுக்கு பணத்தைப் பற்றி கவலைப்படாத ஒரு தலைவன் வேண்டும். நான் சொல்லும் போது யாருக்கும் புரியவில்லை. யோவ், என்னய்யா நடிக்க விட்டீங்கன்னா 300 கோடி சம்பாதிப்பேன். அதற்கு சிலர் விமர்சனம் சொன்னார்கள்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் வசூல் குறித்து கமல் சொன்னது:

ஆனால், அது வந்துட்டு இருக்கு. நான் என் கடனை அடைப்பேன், நான் வயிறார சாப்பிடுவேன், என்னுடைய உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்க முடிந்ததை கொடுப்பேன். அதற்குப் பிறகு இல்லை என்றால் இல்லை என்று தைரியமாகச் சொல்லுவேன். எனக்கு வள்ளல் ஆகுவதில் நம்பிக்கை இல்லை, மனிதனாக இருப்பதே போதும் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறியதன் மூலம் விக்ரம் படம் வசூலில் 300 கோடியை நெருங்கிவிட்டது என்பதை நாசுக்காக கமலஹாசன் சொல்லி இருக்கிறார்.

கமல் நடிக்கும் படங்கள்:

தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாகி வருகிறது. இதனையடுத்து கமலஹாசன் அவர்கள் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருந்தது. அது மட்டுமில்லாமல் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement