என்னக்கூட தான் ஐஸ் வரியானு கேட்டான் – பயில்வான் ரங்கநாதன் குறித்த கேள்விக்கு ஐஸ்வர்யா கொடுத்த எதிர்பாராத பதில்.

0
450
Aishwarya Bhaskaran
- Advertisement -

பயில்வான் ரங்கநாதன் குறித்து ஐஸ்வர்யா அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய உண்மையான பெயர் சாந்தா மீனா. இவர் தன்னுடைய பெயரை ஐஸ்வர்யா என மாற்றிக் கொண்டார். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கலக்கி கொண்டிருந்தவர் ஐஸ்வர்யா.

-விளம்பரம்-
Bayilwan

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என இரு மொழி படங்களிலும் நடிகையாக நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லியாகவும் மிரட்டி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஐஸ்வர்யா பங்கு பெற்று இருக்கிறார். விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூட நடுவராக ஐஸ்வர்யா பங்கேற்றிருந்தார்.

இதையும் பாருங்க : யோவ், என்ன நடிக்கவிட்டா இத்தனை கோடி சம்பாதிப்பேன், அதை வச்சி கடனை அடைப்பேன் – விக்ரம் வெற்றியால் தெம்பான கமல்.

- Advertisement -

ஐஸ்வர்யா அளித்த பேட்டி:

தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அப்போது அவரிடம் பயில்வான் ரங்கநாதன் பேசுவது சரியா? தவறா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு ஐஸ்வர்யா கூறியிருப்பது, பப்ளிக் பில்டுகுள் வந்துவிட்டாலே நல்லது, கெட்டது என இரண்டுக்குமே தயாராகிக் கொள்ள வேண்டும். அது ரிப்போர்ட்டர் உடைய வேலை. அதுதான் அவர் பண்ணுகிறார். அவர் எது கிடைத்தாலும் அப்படி தான் செய்வார்.

suchi

தன் பட அனுபவம் குறித்து ஐஸ்வர்யா சொன்னது:

ராமராஜன் சாருடைய ஒரு படத்தில் நான் நடித்தேன். அப்போது நான் பாவாடை தாவணி அணிந்து நகை எல்லாம் போட்டு ரொம்ப குடும்ப கதாபாத்திரமாக இருந்தேன். பின் நான் தலை குனிந்து நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஐஸ் வரியா? என்று கேட்டார். இப்படி ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் இருக்கிற ஒரு பெண் ஒரு சிம்பிளான புடவை அணிந்து நகை போட்டு வந்தாலே மினுக்கிட்டு எங்க போறளோ? என்று பேசுவது தான் இயல்பு.

-விளம்பரம்-

பிரச்சனைக்கான தீர்வு:

இதையெல்லாம் நாம் எடுத்துக் கொண்டால் நம்முடைய வாழ்க்கை தான் பாதிக்கப்படும். பேசுபவர்கள் பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுக்கு கீழ் திட்டுபவர்கள் கழுவிக் கொண்டு தான் இருப்பார்கள். இதற்காக நம்ம மாத்திரை வாங்கிப் போட்டு சூசைட் பண்ணிக் கொள்வதா? இதை ஒரு பிரச்சனையாக நம் மனதில் போட்டுக்க கூடாது. அதை எல்லாம் உதறிவிட்டு நம் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு தான் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து இருக்கிறார்.அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. சமீபத்தில் கூட பயில்வான் ரங்கநாதன் மீடு புகார் குறித்த சர்ச்சை எழுந்து இருந்தது.

Advertisement