நெற்றியில் கை வைத்து பிரியா விடை கொடுத்தேன்.! கிரேசி மோகன் குறித்து கமல் உருக்கம்.!

0
667

பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரேசி மோகனின் மறைவு தான் தமிழ் சினிமாவை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றிய கிரேசி மோகன், நடிராகவும் தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றி வந்தார். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். 

அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கதை-வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார். முழுக்கவே நகைச்சுவையாக எழுதுவது இவரது சிறப்பு. 

இதையும் படியுங்க : சமந்தா குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்த வதந்தி.! நக்கலாக ட்வீட் செய்துள்ள சம்மு.! 

- Advertisement -

சொல்லப்போனால் கமல் நடித்த பல காமெடி படங்களில் வரும் வசனங்கள் கிரேசி மோகனின் வசனங்கள் தான். சினிமாவை தாண்டி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர். கிரேஸி மோகன் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் மிகவும் உணர்ச்சி பொங்க சில நினைவுகளை பகிர்ந்து, மிகவும் உருக்கத்துடன் பேசியுள்ளார்.

Image result for kamal crazy mohan

நண்பர் கிரேஸி மோகன் அவர்கள் மீது நான் பொறாமைப்படும் பலவற்றில் மிக முக்கியமான விஷயம் அவரது மழலை மாறாத மனசு. அது அனைவருக்கும் வாய்க்காது. பல நண்பர்கள் லௌகீகம்  பழகிக்கிறேன் பேர்வழி என்று அந்த அற்புதமான குணத்தை இருக்கின்றனர் இழந்திருக்கின்றனர். “கிரேசி” என்பது அவருக்கு பொருந்தாத பட்டம். அவர் நகைச்சுவை ஞானி.

-விளம்பரம்-
Image result for kamal crazy mohan

அவரது திறமைகளை அவர் குறைத்துக் கொண்டு மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனரஞ்சகமாக தன்னை காட்டிக் கொண்டார் என்பதுதான் உண்மை. பல்வேறு தருணங்களில் சாருஹாசன்,சந்திரஹாசன், மோகன் ஹாசன் என்றும் வைத்துக் கொள்ளலாம் என்று பகிரங்கமாக தன் பாசத்தை வழிகாட்டியவர்.
அந்த நல்ல நட்பின் அடையாளமாக இன்று அவரது சகோதரர் பாலாஜி அவர்களுடன் இணைந்து நண்பர் மோகன் அவர்களின் நெற்றியில் கை வைத்து பிரியாவிடை கொடுக்கிறோம்.

நட்பிற்கு முடிவு என்பது கிடையாது.. ஆள் இருந்தால் தான் நட்பா என்ன?  மோகன் அவர்களின் நகைச்சுவை அவரது ரசிகர்கள் மூலம் வாழும். அந்த வாழ்விற்கு நானும் துணையிருப்பேன். அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது.. போதாது.. இந்த இழப்பை தாங்கிக் கொள்ள அவர்கள் பழகிக் கொள்வதற்கு மனோதிடம் அளித்திட வேண்டுகிறேன்”

Advertisement