இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து தான்.! பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கமலின் பேச்சு.!

0
700
- Advertisement -

தமிழகத்தில் விரைவில் துவங்க உள்ள 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தலுக்காக அணைத்து கட்சிகளும் தற்போதே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் அரவண்குருச்சி தொகுதியில் தனது வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

-விளம்பரம்-
தமிழிசை ட்வீட்

இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய கமல், சிதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் கோட்சே என்றார். மேலும் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரனாக, அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருப்பதாக பேசிய கமல், சமரச இந்தியா மற்றும் சமமான இந்தியாவுக்கு எதிரான போக்கு காந்தி கொலையிலிருந்தே தொடங்குவதாகவும் கூறியிருந்தார்.

இதையும் படியுங்க : 50 வயதில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த சரண்யா பொன்வண்ணன்.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

கமலின் இந்த பேச்சிற்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கமலின் கருத்து குறித்து தமிழை தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது, மகாத்மாவின் படுகொலையை கண்டித்து நாடே பதறியதுகொலையாளி தூக்கிலிடப்பட்டார்ஆனால் அதை இந்து தீவிரவாதம் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசுவது விஷமத்தனமானதும் ஆபத்தானதும் கூட.புதிய அரசியலை. முன்னெடுப்பதக்க்கூறும் கமல் பழையதை கையில்எடுப்பது மதவிஷம் பரப்பி வரும் ஓட்டுக்காகத்தானே?அரசியல்வேஷம்

தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று கமல் சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி?அரசியல்நடிப்பு???

-விளம்பரம்-
மக்கள் நீதி மய்யம் பிரசாரம்
விவேக் ஓபராய் ட்வீட்

இந்து தீவரவாதம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும் கமல்ஹாசனைக்கண்டிக்கிறோம்.பள்ளபட்டியில் சிறுபான்மை மக்கள் நடுவில் நின்றுகொண்டு மத உணர்வுகளைத்தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும்இவர்மீது தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement