50 வயதில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த சரண்யா பொன்வண்ணன்.! வைரலாகும் புகைப்படம்.!

0
892

தமிழில் கமலஹாசன் நடித்த “நாயகன்” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார். மேலும், பெரும்பாலான பல முன்னனி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார். 

Saranya Ponvannan with her Daughters @ Thalaiva Audio Launch Stills

அம்மா கதாபாத்திரத்தில் சீரியஸான ரோலாக இறந்தாலும் சரி, காமெடியான அம்மாவாக இருந்தாலும் சரி இவர் நடிப்பில் பட்டையை கிளப்பிவிடுவார். பல இளைஞர்களும் இவரது நடிப்பை பார்த்து இவரை போன்ற ஒரு அம்மா தங்களுக்கு கிடைக்க கூடாதா என்று ஏங்கியுள்ளனர்.

இதையும் படியுங்க : அஜித்தை ரோல் மாடலாய் வைத்திருப்பது வேஸ்ட்.! அஜித் ரசிகருக்கு சித்தார்த் கொடுத்த அட்வைஸ்.! 

தமிழில் இதுவரை சூர்யா, அஜித், சிவகார்த்திகேயன் என்று பலருக்கும் அம்மாவாக நடித்திருந்தார். ஆனால், விஜய்க்கு மட்டும் அம்மாவாக நடிக்கவில்லை என்ற ஏக்கம் இருப்பதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் சரண்யா.

சரண்யாவிற்கு திருமணம் முடிந்து இரண்டு பெண்கள் கூட இருக்கின்றனர். தற்போது 50 வயதை கடந்துள்ள சரண்யா அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபல அட்டை படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.