எக்கும் சின்னதோட தயாரா இருங்க – மகேந்திரன் மற்றும் பத்மபிரியாவை வெளுத்து வாங்கிய கமல் பட நடிகை.

0
1705
mnm
- Advertisement -

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் மற்றும் பத்மப்பிரியா ஆகிய இருவரும் தி மு க கட்சியில் சேர்ந்துள்ளது குறித்து நடிகை ஒருவர் வெளுத்து வாங்கியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன்,கட்சியில் இருந்து விலகியதையடுத்து அந்த கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்ட சென்னை தமிழச்சி என்ற புனைப்பெயர் கொண்ட பத்மப்ரியாவும் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விளகுவதாக அறிவித் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Image

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பாக போட்டியிட்டவர் பத்மப்ரியா.இதே தொகுதியில் அதிமுக அமைச்சர் பெஞ்சமின் போட்டியிட்டார்.ஆனால் அதைக் காட்டிலும் சென்னை தமிழச்சி பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்டதால் ஸ்டார் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. இதனால் மதுரவாயல் தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் பாருங்க : விவாகரத்து ஆன பின் பல ஆண்டுகள் கழித்து தாயான ரேவதி – குழப்பத்திற்கு அவரே அளித்த விளக்கம். (தத்து கூட எடுக்கலயாம்)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி 31 ஆயிரத்து 231 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட பத்மபிரியா 33,401 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சி இந்த தொகுதியில் நான்காம் இடத்தை பிடித்தது. மகேந்திரன் மற்றும் பத்மப்பிரியா விலகியதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பலர் வெளியேறினர்.

இந்த நிலையில் மகேந்திரன் மற்றும் பத்மப்பிரியா ஆகிய இருவரும் தி மு க கட்சியில் இணைந்தனர். தி.மு.க-வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகேந்திரன், “பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க கடந்த 2 மாதங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதுவே நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த செயல்பாடு.என்னுடன் 78 நிர்வாகிகள் இணைந்துள்ளனர். மேலும், தி.மு.கவில் இணையும் சுமார் 11 ஆயிரம் உறுப்பினர்கள் கொண்ட பட்டியலும் தி.மு.க தலைவரிடம் அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-
Maiam - Women of #MNM Sripriya & Kameela Nasser with party... | Facebook

இந்த நிலையில் நிலையில் நடிகையும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‘சட்டையை மாற்றுவது போல் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் சில அரசியல்காரியவாதிகள் (எதற்கும் எல்லா கட்சி சின்னத்துடன் சட்டைகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்…மாற்ற வசதியாக இருக்கும்)’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement