‘திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும்’ – ரஜினிக்கு கமல் சொன்னது வாழ்த்தா ? கேலியா ? அவரே அளித்த விளக்கம்.

0
738
rajini
- Advertisement -

உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் தமிழ் சினிமாவின் இரண்டு தூண்களாக இருந்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக விரும்பும் ஒவ்வொரு நடிகரும் கமல்ஹாசனால் அல்லது ரஜினிகாந்தால் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் இருவரும் அவரவர் தனிப்பட்ட வாழ்க்கையில் பல மைல்கற்களை எட்டினர். மேலும், இந்த இரண்டு மாபெரும் நடிகர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் கூட மகத்தான ஒன்றாக இருந்து வருகிறது.

-விளம்பரம்-

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தியதால், இருவரும் ஒன்றாக திரை இடத்தைப் பகிரத் தொடங்கிய நாளிலிருந்து சிறந்த நண்பர்களாக அடையாளம் காணப்பட்டனர். ரஜினி மற்றும் கமல் இருவருமே பல்வேறு விதமான விருதுகளை பெற்று இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு மன்னர் மத்திய அரசு ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது மனைவியை பொது நிகழ்ச்சிக்கு அழைத்து வந்த ரக்ஷன். புகைப்படம் இதோ.

- Advertisement -

தாதா சாகேப் பால்கே விருதை பெரும் ரஜினிக்கு தங்கத் தாமரையுடன் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படும் . இந்திய சினிமா துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது, ஏற்கெனவே நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தமிழ் நடிகர்களில் ரஜினி இந்த விருதை பெற்றுள்ளார். இதனால் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

அந்த வகையில் ரஜினியின் திரைத்துறை நண்பரும் நடிகரும் மக்கள் நீதி மைய்ம் கட்சியின் தலைவருமான கமல் ட்விட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உச்ச நட்சத்திரமும் என் மனதிற்கு இனிய நண்பருமான ரஜினிகாந்திற்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்வளிக்கிறது. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினிக்கு இந்த விருது 100% பொருத்தம் என்று கூறியிருந்தார்.

வீடியோவில் 17 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

கமலின் இந்த பதிவில் ‘திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பதை நிரூபித்த ரஜினி’ என்ற வார்த்தைக்கு பலரும் கேள்வி எழுப்பினர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கமலிடம் கேட்ட போது, அதில் என்ன என்ன விமர்சனம் இருக்கு. திரையில் தோன்றுவதன் மூலமே ரசிகர்களை வென்றெடுத்துவிட முடியும் என்பது அவரின் பர்சனாலிடிய தான குறிக்குது. நான் இவ்ளோ கஷ்டப்பட்டு செய்றத அவர் சும்மா அப்படி வந்தாலே நடக்குது. தாதா சாகேப் விருது வாங்கினால் தான் திறமையானவர்கள் என்பது இல்லை. ரஜினிக்கு இந்த விருது கொடுக்கவே இல்லை என்றால், அவரது பெருமை எந்த விதத்தில் குறைந்துவிடும்? பத்மஸ்ரீ விருது எனக்கு கொடுக்கும் போது என்னை விட தகுதியானவர்கள் இருந்தார்கள். ஆனால், அந்த ஆண்டு அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதே மாதிரி தான் ரஜினி மட்டும் தான் இந்த விருதுக்கு தகுதியானவரா, அவரை தவிர எத்தனை பேர் இருகாங்க என்று கூறியுள்ளார் கமல்.

Advertisement